×
 

சூடுபிடிக்கும் தேர்தல் களம்...!! - பாஜக சார்பில் போட்டியிடும் “சோனியா காந்தி” - காங்கிரஸை எதிர்த்து களமிறங்கிய சுவாரஸ்சியம்...!

கேரளாவின் மூணாறில், நடைபெற உள்ள உள்ளாட்சி பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜ.க சார்பில் சோனியாக காந்தி என்ற வேட்பாளர் போட்டியிடுகிறார்.

கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், இடுக்கி மாவட்டம் மூணாறு நல்ல தண்ணி பஞ்சாயத்தில் வார்டு உறுப்பினராக சோனியா காந்தி என்ற பெயருடையவர் பாஜக சார்பில் போட்டியிடும் சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது.

கேரளாவில் டிசம்பர் 9 மற்றும் 11ம் தேதிகளில், இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. 'இண்டி' கூட்டணியின் பிரதான கட்சிகளான காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் அம்மாநிலத்தில் எதிரும் புதிருமாக போட்டியிடுகின்றன. கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி தலைவர் பதவி மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அந்தந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சுயேட்சைகள் போட்டியிடுகிறார்கள். இவர்கள் தங்கள் வார்டுகளுக்கு உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகள் கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

இதையும் படிங்க: “பாஜகவில் காங்கிரஸ் கட்சியின் ஓடுகாளிகள்” - புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி சர்ச்சை பேச்சு...!

திருச்சூரில் இருந்து திருவனந்தபுரம் வரை ஒன்பதாம் தேதி வாக்குப்பதிவும் பாலக்காட்டில் இருந்து காசர்கோடு வரை 11ஆம் தேதி வாக்குப்பதிவும் 13ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. இந்நிலையில் மூணாறு நல்ல தண்ணீர் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு சோனியா காந்தி என்ற பெயருடையவர் பிஜேபி கட்சி சார்பாக போட்டியிடுகிறார். 

பாஜக வேட்பாளரான சோனியா காந்தி, மறைந்த கூலித் தொழிலாளியும் உள்ளூர் காங்கிரஸ் தலைவருமான துரை ராஜ் என்பவரின் மகள். அவர் அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தியின் மீது கொண்ட மரியாதை மற்றும் பெருமிதம் காரணமாக தனது மகளுக்கு அந்தப் பெயரை சூட்டினார். 

சோனியா காந்தி என்று தனக்கு பெயர் வருவதற்கு காரணம் தன்னுடைய அப்பா மற்றும் குடும்பம் அனைவரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். எனவே எனக்கு என் அப்பா சோனியா காந்தி என்று பெயர் வைத்துள்ளார். ஆனால் என் கணவர் பாஜகவை சேர்ந்தவர் எனவே பாஜக கட்சி சார்பாக மூணார் நல்ல தண்ணீர் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதாக தெரிவித்தார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் பெயரைக் கொண்டுள்ள இவர் பாஜக கட்சியில் போட்டியிடுவது மூணார் நல்ல தண்ணீர் பகுதியில் பேசும் பொருளாகியுள்ளது.

இதையும் படிங்க: வாழ்த்துகள் அஜித்... நிரூபிச்சிட்டீங்க.! விருது வென்றுள்ள நடிகர் அஜித்துக்கு செல்வப் பெருந்தகை அன்பு மழை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share