×
 

நெல்லை மக்களே ரெடியா?... ரூ.356 கோடியில் பிரம்மாண்ட திட்டங்கள்... அமைச்சர் கே.என்.நேரு சொன்ன குட்நியூஸ்...!

நெல்லையில்  நடக்கும் அரசு நிகழ்ச்சியில் 30 ஆயிரம் பேர் அமரும் வகையில் ஏற்பாடுகளை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 

நெல்லை மாவட்டத்திற்கு டிசம்பர் 20 மற்றும் 21ஆம் தேதி 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார். அதன் தொடர்ச்சியாக நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குள் டிசம்பர் 21ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகள் அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதை பார்வையிடுவதற்காக அமைச்சர் கே.என். நேரு, சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு மேலாக அமைச்சர் கே என் நேரு பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் முதல்வர் நிகழ்ச்சி குறித்து ஆய்வு நடத்தினார். ஆய்வுக்குப் பின் அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, நெல்லை மாவட்டத்தில் 538 கோடி மதிப்பிலாக முடிந்த பணிகளுக்கு அதை தொடக்க விழா நடைபெற இருக்கிறது. 21ஆம் தேதி நடைபெற இருக்கும் அரசு நிகழ்ச்சியில் புதிய பேருந்துகளும் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. 

இதையும் படிங்க: FIR-க்கு முன் டிஜிபிக்கு நெஞ்சுவலி... ED சுழலில் சிக்கித் தவிக்கும் திமுக... அடுத்த செந்தில் பாலாஜி இவரா?

இதற்காக டிசம்பர் 20ஆம் தேதி மதியம் முதல்வர் நெல்லைக்கு வர இருக்கிறார். அன்று மாலையில் டக்கரம்மாள்புரம் பகுதியில் கிறிஸ்தவ நல்லெண்ணெய் இயக்கத்தின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் 44 ஆயிரத்து 900 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது. பொருநை அருங்காட்சியகமும் திறந்து வைக்கப்பட இருக்கிறது. அங்கேயும் முதல்வர் பார்வையிட இருக்கிறார். 

356 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்படுகின்றன. 110 கோடி மதிப்பிலான நூலகம் அமைக்கும் திட்டமும் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. விவசாயிகளுக்கு வேளாண்மை துறை சார்பில் வாகனங்கள் மற்றும் இதர உதவிகளும் வழங்கப்படும். பொதுமக்கள் கட்சிக்காரர்களையும் முதல்வர் சந்திக்க இருக்கிறார். நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குள் நடைபெற இருக்கும் அரசு நிகழ்ச்சியில் 30000 பேர் அமரும் வகையில்  ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 

மழைக்காலம் முடிந்ததும் சாலைகள் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வர இருக்கிறது. நெல்லை மாவட்டத்திற்கு சிறப்பு அறிவிப்புகளை முதலமைச்சர் கூறுவார் என்று கூறினார்.

இதையும் படிங்க: கே.என்.நேருவுக்கு அடுத்த அதிர்ச்சி...!! - நகராட்சி நிர்வாகத்துறை ஒப்பந்தங்களில் முறைகேடு... முக்கிய ஆதாரங்களை வெளியிட்ட ED...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share