×
 

நேருவை அடித்தால் திமுகவை அழித்துவிடலாம்!! பாஜக ஸ்கெட்ச் இதுதான்! புட்டு புட்டு வைக்கும் அமைச்சர்!

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உறையூர் பகுதி பெருமாள் கோவில் 39-வது வார்டில் நடைபெற்ற 'என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச்சாவடி' கூட்டம் தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தனது தொகுதியில் தீவிரமாக இயங்கி வருகிறார்.

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உறையூர் பகுதியில் உள்ள பெருமாள் கோவில் 39-வது வார்டில் 'என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச்சாவடி' என்ற திட்டத்தின் கீழ் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். தி.மு.க. நிர்வாகிகள், உள்ளூர் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாவட்டத்தின் வளர்ச்சி குறித்து விரிவாகப் பேசினார். “கடந்த பத்தாண்டு காலத்தில் விடுபட்ட பணிகளை கூட இந்த நான்கரை ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து முடித்துள்ளார். திருச்சியின் ஒன்பது சட்டமன்ற தொகுதிகளிலும் சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்துள்ளார். பல்வேறு திட்டங்களை நமக்கு வழங்கியுள்ளார்” என்று பெருமிதத்துடன் கூறினார்.

இதையும் படிங்க: ராமதாஸ் - அன்புமணி இடையே முற்றும் மோதல்! திருமண விழாவிலும் சந்திக்க மறுப்பு!

மேலும், தன்னை குறிவைத்து மத்திய அரசு வழக்கு தொடுத்துள்ளது குறித்து அமைச்சர் கடுமையாக விமர்சித்தார். “மத்திய அரசு வேண்டுமென்றே என் மீது வழக்கு தொடுத்துள்ளது. நேருவை அடித்தால் திருச்சியில் தி.மு.க.வை அழித்துவிடலாம் என்ற உள்நோக்கத்துடன் இது நடக்கிறது. ஆனால், நான் எந்தத் தவறும் செய்யவில்லை, செய்ததும் இல்லை, செய்யப்போவதும் இல்லை என்ற உறுதியை உங்களுக்கு அளிக்கிறேன்” என்று உற்சாகமாகவும் உறுதியாகவும் பேசினார்.

சமீபத்தில் நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களில் ரூ.1,020 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை பரிந்துரை கடிதம் அனுப்பியிருந்தது. இதற்கு முன்பே அமைச்சர், “மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. சட்டப்படி எதிர்கொள்வேன்” என்று தெளிவாகக் கூறியிருந்தார்.

இக்கூட்டம் வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு நடத்தப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் தி.மு.க.வின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் வகையில் இதுபோன்ற கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட உள்ளன. அமைச்சரின் உறுதியான பேச்சு தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: இன்னைக்கு வேணாம்! 23ம் தேதி வச்சுக்கலாம்! ஒத்திவைக்கப்பட்ட ஓபிஎஸ் கூட்டம்! டெல்லி சிக்னல் பிராப்ளம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share