அமைச்சர் நேரு மீதான முறைகேடு விவகாரம்... அரசு அனுமதிக்கு வெயிட் பண்ணனுமா? லெஃப்ட் ரைட் வாங்கிய நீதிமன்றம்..!!
அமைச்சர் நேரு மீதான முறைகேடு விவகாரத்தில் நீதிமன்றம் சரமாரி கேள்விகளை முன் வைத்து உள்ளது.
வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டும், அரசிடம் அனுமதி பெற வேண்டுமா என அமைச்சர் கே.என்.நேரு மீதான முறைகேடு விவகாரத்தில் நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. அமைச்சர் நேரு மீதான புகார் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
நகராட்சி நிர்வாகத்தில் 2,538 நியமனங்களுக்கு ரூ.634 கோடி லஞ்சமாக பெறப்பட்டுள்ளதால், வழக்குப்பதிவு செய்யும்படி கடந்த அக்டோபரில் அமலாக்கத்துறை தமிழக டிஜிபி-க்கு கடிதம் எழுதியது. இதன் அடிப்படையில் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி அதிமுக எம்.பி இன்பதுரை தாக்கல் செய்த வழக்கில், உடனடியாக வழக்குப்பதிவு செய்ய பிப்ரவரி 20ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி, இன்பதுரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், உடனடியாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டும் ஏன் நிறைவேற்றவில்லை என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ஊழல் தடுப்பு சட்டவிதிகளின்படி வழக்குப்பதிவு செய்ய அரசின் அனுமதி தேவை என மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ பதில் அளித்தார்.
இதையும் படிங்க: மக்களே ரெடியா?... திமுக மாநாட்டில் காத்திருக்கும் சப்ரைஸ்... அமைச்சர் கே.என்.நேரு சொன்ன முக்கிய தகவல்...!
வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டும், அரசிடம் அனுமதி பெற வேண்டுமா என உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசு தலைமை வழக்கறிஞர் தகவல் கூறியதை அடுத்து, வழக்கு விசாரணை ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஸ்கெட்ச் கே.என்.நேருக்கு மட்டுமில்ல... அமலாக்கத்துறை வளையத்தில் அப்துல் வஹாப்... சிக்கியது முக்கிய ஆதாரம்...!