×
 

#BREAKING என்ன ஆச்சு?... கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதி... விடிந்ததுமே தவெகவுக்கு ஷாக்...!

சென்னை கொளத்தூர் தொகுதி தாவெக எம்.எல்.ஏ. வி. எஸ். பாபு, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி. எஸ். பாபு, மூச்சுத் திணறல் காரணமாக அமைந்தகரையில் உள்ள எம்.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எம்.ஜி. மருத்துவமனையின் மூன்றாவது தளத்தில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

75 வயதான அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து தாவெக சார்பில் போட்டியிட்டு, சுமார் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ள வி.எஸ். பாபுவுக்கு, நேற்று இரவு வீட்டில் இருந்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முடிவு தலைகீழாகுமா.? கொளத்தூர் தொகுதியில் முறைகேடு.? நீதிமன்றத்தை நாடிய ஸ்டாலின்..!!

உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின்னர், அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தியதாகவும், வயது மூப்பு காரணமாக இந்த மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் அவரது உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தவெக ஆட்சியில் தொடரும் மின்வெட்டு! நிர்வாக சீர்கேடு என நயினார் நாகேந்திரன் கண்டனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share