அண்ணாமலை முன்பே கே.பி.ராமலிங்கம் அடாவடி… மேடையிலேயே அவமானப்பட்ட நிர்வாகி..!
கே.பி.ராமலிங்கத்தின் அடாவடிச் செயலுக்கு சேலம் மாவட்ட பாஜக நிர்வாகிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்ட நிகழ்ச்சியில் வருக்கு முன்பே, பாஜக மாநிலத் தலைவர் கே.பி.ராமலிங்கம் அடாவடியில் ஈடுபட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கே.பி.ராமலிங்கம். திமுகவின் மாநிலங்களவை எம்பியாக இருந்தவர். கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மக்களை காப்பற்ற பிரதமரும், முதல்வரும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டினார்.
அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும் என்று ஸ்டாலின் விடுத்த கோரிக்கை அவசியமற்றது என்றும் கூறியிருந்தார். 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை எனவும் கருத்து தெரிவித்தார். இதனால் வெறுப்பானதிமுக தலைமை, அவரை திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் கடந்த 2020ஆம் ஆண்டு நீக்கியது.
இதையும் படிங்க: சல்லி சல்லியா நொறுங்கிய அண்ணாமலை இமேஜ்... தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் தெறிக்கவிடும் போஸ்டர்கள்..!
கட்சித் தலைமைக்கு எதிரான கருத்துகளை கூறியதாக, அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கே.பி.ராமலிங்கம் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். உடனே, அவருக்கு பாஜகவின் மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அடுத்து கே.பி.ராமலிங்கம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அப்போதிலிருந்தே தன்னை அரசியல் ஆசானாக கருதிக் கொண்ட அவர், அண்ணாமலைக்கு இணையாக, அறிக்கைகள் வெளியிடுவது, செய்தியாளர்களை சந்திப்பை நடத்துவது, தொண்டர்களைச் சந்திப்பது என பாஜகவுக்குள்ளேயே தனி ராஜ்ஜியம் நடத்தி வந்தார். இந்நிலையில் சேலத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்ட திருமண நிகழ்ச்சி ஒன்றில் கே.பி.ராமலிங்கமும் கலந்து கொண்டார். சேலம் ஐந்து ரோடு பகுதியில் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில் குமார் இல்லத் திருமணம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கே.பி.ராமலிங்கம், மேடையில் யாரும் நிற்க வேண்டாம் என அடாவடி செய்துள்ளார். அப்போது அந்த நிகழ்ச்சியில் பாஜக சேலம் மாவட்ட முன்னாள் தலைவரும், மாவட்டப் பொறுப்பாளருமான ஏ.சி.முருகேசன், அண்ணாமலைக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்ய முயன்றார். அப்போது அருகே இருந்த பாஜக மாநித் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் முருகேசனைத் தடுத்து சால்வையை பிடிங்கி வீசி எறிந்தார்.
கே.பி.ராமலிங்கத்தின் அடாவடிச் செயலுக்கு சேலம் மாவட்ட பாஜக நிர்வாகிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அடித்து ஆடும் அண்ணாமலை & கோ.. செம்ம குஷி ஆகிப்போன பி.எல் சந்தோஷ்..!