பதவி பறிபோனது... அதிமுகவுடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் செய்த சதி... ஸ்டாலின் தலையில் இறங்கியது இடி...!
கிருஷ்ணகிரி திமுக பெண் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்தது.
கிருஷ்ணகிரி திமுக பெண் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்தது.
கிருஷ்ணகிரி நகராட்சியில் திமுகா நகராட்சி பெண் தலைவருக்கு எதிராக இன்று கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பில் அவருக்கு எதிராக 27.வாக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர் பதவியை இழந்துள்ளார். கிருஷ்ணகிரி நகராட்சியை பொறுத்தவரையில 33 வார்டுகளில் 33 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் திமுகவைக் சேர்ந்த ஃபரிதா நவாப் வந்து தலைவராக இருக்கிறார்.
இதையும் படிங்க: உச்சகட்ட பதற்றம்... பேருந்தில் அதிமுக கவுன்சிலர் கடத்தல்?... கண்ணாடியை உடைத்து காக்க பாய்ந்த ர.ர.க்கள் ...!
இந்நிலையில், திமுக உறுப்பினர்களுக்கும் தலைவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே நிலைவி வந்த மோதல் போக்கு காரணமாக திமுக உறுப்பினர்களே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை இன்றைக்கு கொண்டு வந்தனர்.
இன்று நகராட்சியினுடைய ஆணையாளர் சதீஷ்குமார் என்பவரது தலைமையில் நடைபெற்ற இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 27 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். திமுக தரப்புல 21 கவுன்சிலர்களும் அதேபோல காங்கிரஸ், சுயேட்சை மற்றும் அதிமுக தரப்பில் தலா ஒரு கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்கள் திமுக பெண் நகராட்சி தலைவருக்கு எதிராக வாக்களித்தனர்.
சுமார் இரண்டு மணி நேரம் ரகசிய வாக்கெடுப்பு நடந்துச்சு இரண்டு மணி 11 மணிக்கு ஆரம்பித்த இந்த வாக்கெடுப்பு ஒரு மணி அளவில் முடிந்தது.
அதனைத் தொடர்ந்து இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டு 127 பேரும் இந்த வாக்கெடுப்புல கலந்துகிட்ட 27 பேரும் நகராட்சி மன்ற தலைவி ஃபரிதா நவாப்புக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
இதனை படுத்து தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் வந்து அவர் பதவியை இழந்துள்ளார். அடுத்த கட்டமாக இந்த தீர்மானங்கள் வந்து நகராட்சி நிர்வாகத்ததுறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, புதிய தலைவர் தேர்ந்தெடுக்கும் பணிகள் வந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, ஒரு அதிமுக கவுன்சிலரான நாகஜோதியை திமுக.,வினர் மனமாற்றம் செய்து நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு அழைத்துச் சென்றதாக கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் தலைமையில் கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.
நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு இன்று நடைபெறும் நிலையில் கடந்த இரு தினங்களாக நகர்மன்ற உறுப்பினர்கள் சுற்றுலா சென்ற விட்டு, இன்று காலை மீண்டும் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் வந்த பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. திமுக அதிமுக வினரிடையே கைகலப்பு மூண்ட நிலையில் இருதரப்பினரையும் காவல்துறையினர் தலையிட்டு அமைதிப் படுத்தினார். மேலும் வாக்கெடுப்பை அமைதியான முறையில் நடத்துவதற்காக அங்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #Breaking தமிழகத்தையே உலுக்கிய திருச்சி இளைஞர் படுகொலை... அதிரடி திருப்பம்...!