தவெகவுக்கு ஆபத்து... ஆதவை அமைச்சரவையில் இருந்து தூக்குங்க... விஜயை அலர்ட் செய்த கிருஷ்ணசாமி...!
2025ம் ஆண்டு அமலாக்கத்துறை அறிக்கையில் பல்வேறு விதமான அதிர்ச்சி நிகழ்வுகள் சுட்டுகாட்டப்பட்டுள்ளது.
கோவை குனியமுத்தூர் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் உள்ள ஆதவ் அர்ஜூனாவின் துணையார், மற்றும் மாமியார் குறித்து கடந்த 2 நாட்களாக சர்வதேச போதை கும்பல் தொடர்புகள் உள்ளது என தகவல் வருகிறது. இது மிகவும் கவலையளிக்க கூடிய வகையில் உள்ளது.
2025ம் ஆண்டு அமலாக்கத்துறை அறிக்கையில் பல்வேறு விதமான அதிர்ச்சி நிகழ்வுகள் சுட்டுகாட்டப்பட்டுள்ளது. ஜான் பிரிட்டோ பல ஆண்டுகளாக போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள வந்துள்ளனர். அதன் மூலம் வந்த பல கோடியை நண்பர்கள் உறவினர்கல் மூலம் கைமாற்றியுள்ளாது தெரியவந்ததுள்ளது.
இதற்கு முன் ஜான் பிரிட்டோ என்பவர், ஜான் கெனடி, லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா துணைவியர் டெய்ஸி ஆகியோர் பணம் பரிமாற்றம் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதால் கேரளாவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு செல்ல கூடாது என உத்தரவு , இதை ரத்து செய்ய கோரி விதி விலக்கு பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: "ஸ்டாலின் அப்படி சொல்லல"..! திரித்து வெளியிடுறீங்க... தங்கம் தென்னரசு பகிரங்க குற்றச்சாட்டு..!!
விஜய் ஊழலற்ற ஆட்சியை கொண்டு வருவோம் என்ற வாக்குறுதியை கொடுத்துள்ளார். கட்சி மற்றும் ஆட்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஆதவ் அர்ஜூனா துணைவியர், மாமியர் சர்வதேச போதை கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது.
ஆதவ் அர்ஜூனாவை தமிழக வெற்றி கழகத்தில் வைத்திருப்பதும், அமைச்சரவையில் வைத்திருப்பது முறையா?. மாற்றத்தை எண்ணி தான் மக்கள் வாக்களித்துள்ளனர். விசாரணையில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து உறுதியாகும் வரை அவரை நீக்க வேண்டும்.
விஜய் தொடர்ந்து மெளனம சாதிக்க கூடாது. கரூரில் 41 பேர் உயிரிழந்தனர். 20 லட்சம் கொடுத்தனர். அந்த பணம் எந்த பணம் என தெளிவுபடுத்த வேண்டும். ஆதவ் அர்ஜூனா கொடுத்த பணமா? எங்கிருந்து வந்தது என தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: சாதிக்கும் மாற்றுத்திறனாளிகள்... விருது வழங்கிய கவுரவிக்கும் தமிழக அரசு..! முக்கிய அறிவிப்பு..!!