மீண்டும் சீனுக்கு வந்த K.T ராகவன்..! நிர்மலாவின் பரிபூரண ஆசி..!
தனது கட்சிப்பதவியை ராஜினாமா செய்து ஒதுங்கி இருந்த கே.டி.ராகவனுக்கு மத்திய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமனின் ஆசியுடன் மீண்டும் பாஜகவில் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பா.ஜ.க-வின் பொதுச்செயலாளராக இருந்தவர் கே.டி.ராகவன். இவர் பல ஆண்டுகளாகவே மாநிலத் தலைவர் பதவிக்கு முயற்சி செய்து வந்தார். அவருக்கென தனி ஆதரவாளர்கள் வட்டத்தையும் வைத்திருந்தார். மாநிலத் தலைவராக அண்ணாமலை பதவிக்கு வந்த பிறகு, வீடியோ சர்ச்சையில் ராகவன் சிக்கியதை அடுத்து 2021ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு அமைதியாக ஒதுங்கி இருந்தவர் கடநத சிலமாதங்களாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
சமீபகாலமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூலமாக பாஜகவில் முக்கியப் பதவிக்கு முயற்சி ச்ய்து வந்தார். சமீபத்தில், 'சாவர்கர், ஒரு கலகக்காரனின் கதை' என்கிற புத்தகம் வெளியிடப்பட்டது. கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வெளியிட்ட இந்தப் புத்தகத்தின் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தவர் கே.டி.ராகவன்தான்.
இதையும் படிங்க: பெரியவர் கருணாநிதி ஆதரித்ததை மகன் ஸ்டாலின் எதிர்ப்பதா.? நிர்மலா சீதாராமன் அதிரடிக் கேள்வி..?
நிர்மலா சீதாராமனின் தீவிரவிசுவாசியான கே.டி.ராகவன், அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்று வந்தார். இந்நிலையில் பாஜகவில் மாநில ஒருங்கிணைப்பு தலைவராக இருக்கும் அவரை சென்னை மேற்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட நிர்வாகிகளை நியமனம் செய்வதற்காக பார்வையாளராக கே.டி.ராகவனை நியமனம் செய்துள்ளார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்தின்.
தனது கட்சிப்பதவியை ராஜினாமா செய்து ஒதுங்கி இருந்த கே.டி.ராகவனுக்கு மத்திய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமனின் ஆசியுடன் மீண்டும் பாஜகவில் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை கே.டி.ராகவனின் ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: வட இந்தியர்கள் யாசகம் எடுக்கிறார்கள்.. தமிழர்கள் யாசகம் இடுகிறார்கள்.. சொல்கிறார் அமைச்சர் பெரியகருப்பன்!!