×
 

"வெளுத்தது எல்லாம் பால் என நம்பும் வெள்ளை மனம் கொண்டவர்" ... இபிஎஸை 'ஆஹா ஓஹோ ' என புகழ்ந்து தள்ளிய கே.டி. ராஜேந்திர பாலாஜி...!

எடப்பாடி பழனிச்சாமி எடுக்கின்ற முடிவுகள், பேச்சுகள் செயல்பாடுகள் என அனைத்தும் அதிமுகவின் வளர்ச்சிக்கானதாக தானிருக்கும்

சிவகாசியில் அதிமுக ஒன்றியப் பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது :- அதிமுக தொண்டர்களின் குடும்பத்திற்காக இருக்கக்கூடிய ஒரே இயக்கம் அதிமுக. ஆனால் ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்காகவே இயங்கும் கட்சி திமுக.

 வெள்ளையெல்லாம் பால் என்று எண்ணுகின்ற வெள்ளை மனம் படைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி.

சில நேரங்களில் தவறுகளை சுட்டிக்காட்டிக் காட்டுகிறார். தட்டிக்கொடுக்கிறார். கேட்க மறுக்கிறார்கள் என்ன செய்ய முடியும். அவர்களைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் கட்சியின் நலனுக்கான அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார். தனி நபர்களை விட இயக்கத்தின் விசுவாசம் தான் பெரிது. இயக்கம் தான் பெரிது என்று எண்ண வேண்டும்.

இதையும் படிங்க: பாஜகவின் கொள்கை தாங்கி EPS... அமைச்சர் எ.வ.வேலு விமர்சனம்...!

எடப்பாடி பழனிச்சாமி எடுக்கின்ற முடிவுகள், பேச்சுகள் செயல்பாடுகள் என அனைத்தும் அதிமுகவின் வளர்ச்சிக்கானதாக தானிருக்கும் .

அதிமுக பாஜக கூட்டணி வெற்றிக்ககூட்டணி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக பாஜக கூட்டணிதான் வெல்லும். இனவாதம், வகுப்பு வாதம், பிரிவினைவாதம் இல்லாத தேசிய நலனில் அக்கறை கொண்ட கட்சி பாரதிய ஜனதா கட்சி.

சுதந்திர போராட்ட வீரர்களை ஊக்குவிக்கும் கட்சி பாரதிய ஜனதா. பிரதமர் மோடி தேசியத்தை இரு கண்களாக பாவிக்கும் தேச பக்தர், அவர் தலைமையிலுள்ள பாஜகவுடன்தான் நாம் கூட்டணி வைத்துள்ளோம்.

நாம் வகுப்புவாத காட்சிகளோடோ, தீவிரவாத கட்சிகளோடோ கூட்டணி வைக்கவில்லை. இந்த நாட்டை பாதுகாக்கும் பாரதிய ஜனதா கட்சியோடு அதிமுக கூட்டணி வைத்துள்ளதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். 

மாவீரன் நேதாஜி வழியை பின்பற்றக்கூடிய தொண்டர்களை கொண்ட தேசியம் மீது பற்று மிக்க கட்சி அதிமுக. தேசப்பற்றுள்ள அதிமுக தேசத்தை பாதுகாக்கும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது.

இந்த கூட்டணியே வெற்றிக்கு போதுமானதுதான், இருப்பினும் வருகிறஜனவரி மாதத்திலிருந்து எதிர்பாராத பல அரசியல்கட்சிகள், சமூக அமைப்புகள் அதிமுகவிற்கு ஆதரவு தர உள்ளது. எனவே அதிமுக பலமான கூட்டணி அமைத்து 220 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறும்.

களப்பணி செய்ய உள்ள அதிமுக நிர்வாகிகள் அனைவரும் போராளிகள் போல் செயல்பட வேண்டும். பஞ்சாயத்து தேர்தல் நேரத்தில் பார்த்துக்கொள்வோம் என நினைத்தால் களத்தை இழந்துவிடுவோம்.

தேர்தல் களத்தில் எச்சரிக்கையோடும், எதிர் யார் என்று பாராமல் யாராக இருந்தாலும் வெல்வது அதிமுகதான் என்ற முனைப்போடு பணியாற்ற வேண்டும். வீர வரலாறுகளை படியுங்கள், பெடல்காஸ்ட், சேக்குவார், பிரபாகரன் ஆகியோரின் வீர வரலாறுகளை படித்து அவர்களை போல் போராளிகளாக அதிமுகவின் வெற்றிக்காக பாடுபட வேண்டும். 

சிவகாசி சாட்சியாபுரத்தில் புதிதாக திறக்கப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பழைய மின் கம்பங்களுடன் பொருத்தப்பட்டுள்ள பழைய மின் விளக்குகளை 10 நாட்களில் மாற்றி புதிய மின்விளக்குகளை அமைக்காவிட்டால் மறியலுடன், ஆர்ப்பாட்டம் செய்வேன். 

பாலம் திறப்பிற்கு முதல் நாள் இரவு தற்காலிகமாக பொருத்தப்பட்ட பழைய மின்விளக்கு தீ பிடித்து எரிந்து ள்ளது.பாலத்திற்கு திமுக அரசால் புதிய மின் விளக்குகள் அமைக்க முடியவில்லை என்றால் அதிமுக எம்பி-க்கள் நிதியிலிருந்து புதிய தரமான மின்விளக்குகள் அமைக்க நாங்கள் தயாராக உள்ளோம். என்றார்.

இதையும் படிங்க: சுதந்திரமாக மீன்பிடிப்பது எப்போது? பாவமா தெரியலையா... மீனவர்களை மீட்க இபிஎஸ் வலியுறுத்தல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share