×
 

விழுந்தது பேரிடி... காங்கிரஸுக்கு ஷாக் கொடுத்த சாக்கோட்டை அன்பழகன்... அறிவாலயத்திற்கு பறந்த முக்கிய மெசெஜ்...! 

 திமுக- காங்கிரஸ் உடனான உறவு முறிந்ததன் எதிரொலியாக திமுக மாமன்ற உறுப்பினர்கள் மேயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

48 உறுப்பினர்கள் கொண்ட கும்பகோணம் மாநகராட்சியில் திமுகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 ஆக உள்ள நிலையில், இரண்டு உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு மேயர்பதவி வழங்கப்பட்டுள்ளது.  திமுக- காங்கிரஸ் உடனான உறவு முறிந்ததன் எதிரொலியாக திமுக மாமன்ற உறுப்பினர்கள் மேயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இது தொடர்பாக திமுக கட்சி தலைமைக்கு தெரியப்படுத்தியுள்ளேன். தலைமை என்ன உத்தரவு தருகிறதோ அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சாக்கோட்டை அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார்.  48 உறுப்பினர்கள் கொண்ட கும்பகோணம் மாநகராட்சியில் திமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 ஆக உள்ளது காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு உறுப்பினர்கள் உள்ள நிலையில் அந்த கட்சிக்கு மேயர் பதவி கொடுத்தது.
 
நேற்று திடீரென காங்கிரஸ் கட்சி, திமுக உடனான உறவை முறித்துக் கொண்டது. இதனைத் தொடர்ந்து மேயர் பதவியில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சரவணன் என்பவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என திமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். திமுக உறுப்பினர்களின் கோரிக்கையை, கட்சி தலைமைக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும், கட்சி தலைமை என்ன நடவடிக்கை எடுக்க கூறுகிறதோ, அதன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூர் திமுக வடக்கு மாவட்ட  செயலாளர் சாக்கோட்டை அன்பழகன் தெரிவித்தார். 

அதிமுகவில் 3 பேரும், இந்திய் யூனியன் முஸ்லிம் லீக், சிபிஎம், மதிமுக ஆகிய கட்சிகளில் தலா ஒருவரும் மாநகராட்சி உறுப்பினர்களாக உள்ளனர். மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 கவுன்சிலர்களில் பெரும்பாலானவர்கள் திமுகவினர்தான். காங்கிரஸ் கட்சியைச் சேந்த இருவர்தான் கவுன்சிலர்களாக வெற்றி பெற்றனர். ஆனால், மேயர் பதவி காங்கிரஸுக்கு ஒதுக்க, திமுகவினருக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டது. அது இன்று வரை நீடித்தும் வருகிறது. பதவியேற்ற முதல் நாளில் இருந்தே திமுக கவுன்சிலர்களுடன் மேயர் சரவணனுக்கு மோதல் போக்கு நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 
 

இதையும் படிங்க: கவர்னரு நல்லவர்தான்!! ஆனா.. ஆளுநர் நெருக்கடியில் இருப்பதாக மாணிக்கம் தாகூர் பதில்!!

இதையும் படிங்க: 180 சீட்டு ஜெயிச்சிருக்கணும்! தோத்ததே இவரால தான்! செல்வப்பெருந்தகைக்கு எதிராக போர்க்கொடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share