×
 

திருமாவளவன் திமுகவின் பிள்ளையா? விஜயையும், சீமானையும் சீண்டிய விவகாரம்! குஷ்பு விளாசல்!

'விஜயும், சீமானும் பா.ஜ.,வின் பிள்ளைகள் என கூறும் திருமாவளவன், தி.மு.க.,வின் பிள்ளையா' என, தமிழக பா.ஜ., துணை தலைவர் குஷ்பு விமர்சித்து உள்ளார்.

சென்னை: தமிழக பாஜக துணைத் தலைவர் குஷ்பூ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோல். திருமாவளவனை கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் அவர் அளித்த பேட்டியில், திருமாவளவன் திருப்பரங்குன்றம் விவகாரத்தைப் பற்றி கேள்வி எழுப்பியதை சுட்டிக்காட்டினார். 

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றினால் எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிடுமா என்று திருமாவளவன் கேட்கிறார் என்று கூறிய குஷ்பூ, அவரால் கிறிஸ்துமஸ் அல்லது ரம்ஜான் கொண்டாடினால் எய்ம்ஸ் வந்துவிடுமா என்று பேச முடியுமா என்று எதிர்க்கேள்வி எழுப்பினார். ஓட்டு வங்கிக்காக சிறுபான்மையினரைத் தொடுவதற்கே அவர் பயப்படுகிறார் என்று விமர்சித்தார்.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று பாஜக சொல்லவில்லை என்று தெரிவித்த குஷ்பூ, அது உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு என்று விளக்கினார். திருப்பரங்குன்றம் விவகாரம் மக்களின் நம்பிக்கை சார்ந்தது என்றும், பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை காக்க அவர்கள் போராடுகின்றனர் என்றும் கூறினார். மதச்சார்பின்மை என்ற பெயரில் திருமாவளவன் மத வெறுப்புணர்வை வெளிப்படுத்துகிறார் என்று கடுமையாக சாடினார்.

இதையும் படிங்க: “மதவெறி அரசியலுக்கு தமிழக மக்கள் இடம் கொடுக்கமாட்டார்கள்” - பாஜகவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த திருமா...!

மேலும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் பாஜகவின் பிள்ளைகள் என்று திருமாவளவன் கூறுவதை சுட்டிக்காட்டிய குஷ்பூ, முதலில் திருமாவளவன் யாருடைய பிள்ளை என்று கேட்டார். 

அவர் திமுகவின் பிள்ளையா அல்லது காங்கிரஸின் பிள்ளையா என்று பதில் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தனது நோக்கம் இல்லை என்றும், பாஜகவின் வெற்றியே தனது வெற்றி என்றும் குஷ்பூ தெரிவித்தார்.

இந்த பேட்டி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சிகளிடையே விமர்சனங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

இதையும் படிங்க: 97 லட்சம் வாக்குகள் நீக்கத்திற்கு இதுதான் காரணமா? - தமிழக மக்களை அலர்ட் செய்த திருமாவளவன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share