“தவறான அவதூறுகளை பரப்பக்கூடாதுன்னு...” - ரஜினி குறித்து ஆதவ் கருத்து.. லதா ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்சன்..!!
ஆதவ் குறித்த கேள்விக்கு லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் தவெக கூட்டம் ஒன்றில் பேசிய ஆதவ் அர்ஜுனா, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராததற்கு திமுக-வின் மிரட்டலே காரணம் என்றும், அந்த அழுத்தத்தைத் தாங்கும் "மனவலிமை" ரஜினிக்கு இல்லை என்றும் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையெல் அதற்கான எதிர்வினைகளை தவெக வர உள்ள தேர்தலில் சந்திக்கக்கூடும் என்றும் ரஜினி ரசிகர்கள் பகிரங்க எச்சரிக்கை விடுத்தனர்.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ரஜினிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இந்நிலையில்"காலம் பதில் சொல்லும்" என்று குறிப்பிட்ட அவர், தனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அரசியல் தலைவர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார். இதனையடுத்து நான் கூறிய கருத்து வேறு நோக்கத்துடன் இருந்தது. அது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால், அதற்காக நான் மனமார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என அந்தர் பல்டி அடித்திருந்தார். இதுகுறித்த கேள்விக்கு லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த லதா ரஜினிகாந்த், ரஜினி - கமல் இணைந்து நடிக்கக்கூடிய படத்திற்காக அனைவரும் காத்திருப்பதாக கூறினார்.
இதையும் படிங்க: அன்புக்கு அடிபணிபவர் ரஜினி! அவரை மிரட்டி பணியவைக்க முடியாது! அமைச்சர் ரகுபதி விளக்கம்!
எத்தனை ஹீரோக்கள் வந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனித்து நிற்க எதை காரணமாக பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, கடவுளுடைய அருள், மக்களோட அன்பு, அவருடைய கடினமான உழைப்பு இதை தான் பெருமையாக நினைக்கிறேன் என்றார்.
ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு அந்த முடிவில் இருந்து பின்வாங்க திமுக தான் காரணம் என ஆதவ் அர்ஜூனா தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு, தவறான அவதூறுகளை பரப்பக்கூடாது என ரஜினியே சொல்லியிருக்கிறார். இதுகுறித்து அவரே தெளிவான அறிக்கை வெளியிட்டுள்ளார். தவறான கருத்துகள் ரஜினி ரசிகர்களை மட்டுமல்ல அனைவரையும் பாதிக்கக்கூடியது எனக்கூறினார்.
இதையும் படிங்க: காலம் பேசாது... காத்திருந்து பதில் சொல்லும்..! ஆதவ் அர்ஜுனா சர்ச்சை... மௌனம் கலைத்த ரஜினி..!