×
 

செல்வப்பெருந்தகையால் தான் காங்கிரஸை விட்டு விலகினேன் - விஜயதரணி ஆவேசம்!

காங்கிரஸ் கட்சியில் மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்து கட்சிப் பணியாற்றிய என்னை, செல்வப்பெருந்தகையின் செயல்பாடுகளே வெளியேறத் தூண்டின என்று விஜயதரணி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் விஜயதரணி, இன்று களியக்காவிளை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

காங்கிரஸ் கட்சியில் மூன்று முறை எம்.எல்.ஏ-வாகப் பணியாற்றிய விஜயதரணி, செல்வப்பெருந்தகையுடனான கருத்து வேறுபாடு காரணமாகவே பாஜாகவில் இணைந்ததாக முதன்முறையாகத் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்த செல்வப்பெருந்தகை, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பற்றிப் பேச எடப்பாடி பழனிசாமிக்குத் தகுதியில்லை என விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்து விஜயதரணி பேசியதாவது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பற்றிப் பேச செல்வப்பெருந்தகைக்கு எந்தத் தகுதியும் இல்லை. தற்போது தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை 55% ஆகவும், சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் 125% ஆகவும் உயர்ந்துள்ளது. இதைப்பற்றிப் பேச அவருக்குத் துணிவு இருக்கிறதா?" என கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: தேர்தலுக்கு பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

தமிழகத்தின் நிலைமையைப் பேசாமல், வட மாநிலங்களை ஒப்பிட்டுப் பேசி அவர் பித்தலாட்டம் காட்டி வருவதாகச் சாடினார். "காங்கிரஸ் கட்சிக்காக இத்தனை ஆண்டுகள் பாடுபட்டு 3 முறை எம்.எல்.ஏ-வாக இருந்தும், செல்வப்பெருந்தகையின் செயல்பாடுகளால் தான் நான் கட்சியை விட்டு விலகும் சூழல் ஏற்பட்டது" எனக் குற்றம் சாட்டினார்.

விஜயதரணி இன்று களியக்காவிளையில் வீடு வீடாகச் சென்று தாமரைச் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தார். வாகனப் பிரசாரத்தின் போது அவர் பேசுகையில், குற்றப் பின்னணி உள்ள நபர்களைக் காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்திருப்பதைத் தொகுதி மக்கள் நன்கு கவனித்து வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

 

இதையும் படிங்க: "85% வேட்பாளர்கள் இறுதி!" – நாளை வெளியாகிறது தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share