மகளிர் இட ஒதுக்கீடு மசோதா..! மக்களவையில் 207 எம்.பி.க்கள் ஆதரவு..!!
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஒல்லித்தழை மீதும் வாக்கெடுப்பு நடைபெற்றது.
தொகுதி மறு வரையறையோடு கூடிய மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு 27 எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். தொகுதி மறு வரையறை மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொகுதி மறுவறையறை மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்ப்புகளை மீறி இரண்டு மசோதாக்களை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் தாக்கல் செய்தார்.
அரசியலமைப்பு சட்டம் 131 வது திருத்தம் மசோதா, தொகுதி மறு வரையறை மசோதா ஆகியவற்றை தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து யூனியன் பிரதேச சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்துள்ளார். மசோதாவை ஏற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் வாதத்தை முன் வைத்தனர்.
மசோதாவை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்றும் தெரிவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து, மசோதா கலை மக்களவையில் அறிமுகப்படுத்துவதற்கான வாக்கெடுப்பு நடந்தது. மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் மீது வாக்கெடுப்பு நடைபெறுகிறது. மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக வாக்கெடுப்பு நடந்தது. குரல் வாக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிரிவு வாரியாக வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில்,
இதையும் படிங்க: உங்க தலைவர் கருப்பு கொடியேற்றினால் என்ன..? நீலக்கொடி ஏற்றினால் என்ன..? மக்களவை சபாநாயகர் கிண்டல்..!!
தொகுதி மறு வரையறையோடு இணைந்த மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு 207 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மொத்தம் பதிவான 333 வாக்குகளில் 27 பேர் ஆதரவாகவும் 126 பேர் மசோதா அறிமுகத்திற்கு எதிராகவும் வாக்களித்துள்ளனர். 86 எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: 32 திருத்தங்களுடன்..!! 2026-27 நிதிநிலை அறிக்கை மக்களவையில் நிறைவேற்றம்..!!