எமனாக மாறிய யூரியா லாரி... தூக்கி வீசப்பட்ட தந்தை, மகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி...!
யூரியா மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யூரியா மூட்டை ஏற்றி சென்ற லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஹெல்மெட் அணியாததால் தந்தையும் மகளும் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகேயுள்ள துத்திப்பட்டுவை வெங்கடேசன் என்பவரின் மகள் பிரியா புதுச்சேரியில் உள்ள நர்சிங் கல்லூரியில் பயின்று வருகிறார். நர்சிங் பயிலும் மகளை தந்தை இருசக்கர வாகனத்தில் புதுச்சேரிக்கு செல்ல அழைத்து சென்ற போது விழுப்புரத்தில் இருந்து செஞ்சி செல்லும் சாலையில் பூண்டியிலுள்ள தனியார் பெட்டோல் பங்க் அருகில் செஞ்சிக்கு யூரியா மூட்டை ஏற்றி சென்ற லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி கொண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தந்தை மகளுக்கு தலையில் பலத்த காயமடையவே ரத்தம் அதிகளவில் வெளியேறி தந்தையும், மகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: எப்படியெல்லாம் சாவு வருது... குறுக்கே சட்டென வந்த தெருநாய்... மனைவி கண்முன்னே பறிபோன கணவன் உயிர்...!
விபத்து குறித்து தகவலறிந்து வந்த கஞ்சனூர் போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கத்திலுள்ள அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை செய்தனர்.
இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் ஹெல்மெட் அணியாததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டவுடன் லாரி ஓட்டுனர் லாரியை அங்கையே விட்டுவிட்டு ஓடியதால் திருச்சி மணச்சல்லூரை சார்ந்த லாரி ஓட்டுனர் ராகவேந்திரனை பிடித்து போலீசார் பிடித்து விசாரனை செய்து வருகின்றனர்.*
தந்தையும் மகளும் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பெரும் சோகம்… சவுதியில் 42 இந்தியர்கள் உடல் கருகி உயிரிழப்பு… பிரதமர் மோடி இரங்கல்..!