வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடி... மதுராந்தகத்தில் வாக்குப்பதிவு நிறுத்தம்... விசில் சின்னத்திற்கு ஸ்பெஷல் அடையாளமா?
வாக்குப்பதிவு இயந்திரத்தில் விசில் சின்னத்திற்கு நேராக கருப்பு மை அடையாளம் இருந்ததால் மதுராந்தகம் தொகுதியில் வாக்குப்பதிவு தாமதம்.
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தண்டரை புதுச்சேரி பகுதியில் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் அடையாளமாக கருப்பு மை தடவப்பட்டிருப்பதாகக் கூறி, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தண்டரை புதுச்சேரி பகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 55-ல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கருப்பு மை தடவப்பட்டிருப்பதாகக் கூறி வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நல்லறை புதுச்சேரி பகுதியில் அமைந்துள்ள இந்த வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் விசில் சின்னத்திற்கு நேராக உள்ள நீல நிற அழுத்தும் பொத்தானில் பெரிய அளவில் கருப்பு நிற மை தடவப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தவெகவில் இணைந்ததையே படு கொச்சையாக விமர்சித்த சத்யபாமா... தாறுமாறு வைரலாகும் வீடியோ...!
இதற்கு அப்பகுதி வாக்காளர்களும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விசில் சின்னத்திற்கு நேராக அந்த கருப்பு மை இருப்பதால், கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் உள்ளிட்ட வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அந்த அடையாளத்தை வைத்து நான்காவது பொத்தானை எளிதாக அடையாளம் கண்டு வாக்களிக்க நேரிடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, அந்த வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வாக்குப்பதிவை நிறுத்தினர்.
தற்போது அந்த இயந்திரம் மாற்றப்பட்ட பிறகு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் முக்கால் மணி நேரமாக அங்கு வாக்குப்பதிவு நடைபெறவில்லை.
இதையும் படிங்க: அதெப்படி குறையும்..?மரகதம் குமரவேல் வருமான வரி கணக்கு..! அதிமுக கேள்வி..!