உன்னை போல் முட்டாள் இல்லை!! வாயை கொடுத்து சிக்கிய வெங்கடேசன்!! எம்.பி பதவிக்கு வேட்டு!
உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை மறைமுகமாக விமர்சித்து மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசன் கருத்து வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை: இன்று (டிசம்பர் 3) திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை மகாதீபம் ஏற்ற அனுமதி அளித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை மறைமுகமாக விமர்சித்து மதுரை CPI(M) எம்.பி. சு. வெங்கடேசன் வெளியிட்ட சர்ச்சைக் கருத்து பெரும் புயலை கிளப்பியுள்ளது. “கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்ற மதவெறி சக்திகள் எல்லா வகையிலும் முயல்கின்றன... ஹிந்துத்துவா மதவெறி அரசியலை எதிர்கொள்ள குன்றென நிமிர்ந்து நிற்போம்” என்று அவர் எக்ஸ் தளத்தில் எழுதியது ஹிந்து அமைப்புகளை கொதிப்படையச் செய்துள்ளது.
மார்ச் மாதத்தில் “குன்றம் குமரனுக்கே” என்று ஹிந்துக்கள் ஒன்றுகூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதநல்லிணக்க கூட்டமைப்பு நடத்திய உள்ளரங்க மாநாட்டிலும் வெங்கடேசன் நீதிபதிகளை மறைமுகமாக சாடியிருந்தார். “உனக்கு தேவையான தீர்ப்பை எழுதிக் கொடுத்துவிட்டு, நாளை ஒய்வு பெற்று கவர்னராக உட்காருவது போன்ற அசிங்கத்தை நாங்கள் செய்ய மாட்டோம்” என்று அப்போது பேசியது இப்போது மீண்டும் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நேற்றுமுன்தினம் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமை... அதைத் தடுக்க முடியாது” என்று தெளிவாகத் தீர்ப்பளித்தார். இதற்கு பதிலடியாக வெங்கடேசன் “மதவெறி சக்திகள்... கலவர தீபம்” என்று எழுதியது ஹிந்து அமைப்புகளை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.
இதையும் படிங்க: குட்டையை குழப்பிய தம்பிதுரை! தேஜ கூட்டணிக்குள் நெருக்கடி! பாஜக எம்.பிக்கள் அதிருப்தி!
ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்டத் தலைவர் சோலை கண்ணன் கடுமையாகச் சாடியுள்ளார். “மதுரை குப்பை நகரமாகியதையும், மாநகராட்சி ஊழல் மலிந்ததையும் கண்டிக்க துப்பில்லாத வெங்கடேசன், சம்பந்தமே இல்லாத திருப்பரங்குன்றம் தொகுதியில் மூக்கை நுழைத்து நீதிமன்றத் தீர்ப்பையும் நீதிபதியையும் அவமதிக்கிறார். இவர் ஏற்கனவே ஆடு-கோழி பலி தடை தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளையும் அவமானப்படுத்தினார். இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி பதவிப் பிரமாணத்திற்கு எதிரானது. வெங்கடேசனின் எம்.பி. பதவியைப் பறிக்க வேண்டும்” என்று கொந்தளித்தார்.
பல்வேறு ஹிந்து அமைப்புகளும் “வெங்கடேசன் மதுரை வந்தால் முற்றுகையிடுவோம்... கறுப்புக் கொடி காட்டுவோம்” என்று போர்க்கொடி தூக்கியுள்ளன. மத ஒற்றுமைக்கு முன்மாதிரியாக விளங்கும் திருப்பரங்குன்றத்தில் கலவர விதையை விதைக்கும் வகையில் பேசியதாக அவர் மீது கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தச் சர்ச்சை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, தமிழக அரசியல் களத்தை சூடேற்றியுள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில் அமித்ஷாவைச் சந்தித்த OPS! பாஜகவுடன் மீண்டும் கூட்டணியா? தனிக் கட்சியா?