×
 
☰

காலி பணியிடங்கள்... தமிழக அரசுக்கு டார்க்கெட் நிர்ணயித்த மதுரை ஐகோர்ட் கிளை... பரபரப்பு உத்தரவு...!

காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக 6 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

தமிழகத்தில் நன்னடத்தை அலுவலர்களின் காலிப் பணியிடங்களை நிரப்புவதுடன், கூடுதல் பணியிடங்களை உருவாக்கி, மாவட்டந்தோறும் உரிய கட்டமைப்புகளை ஏற்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கு. 

மதுரையைச் ராஜா உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், தமிழகத்தில் முன்பு நன்னடத்தை அலுவலர்களுக்கான அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 96 ஆக இருந்த நிலையில், 32 பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டதால் எண்ணிக்கை 64 ஆகக் குறைந்துள்ளது. தற்போது 38 அலுவலர்கள் மட்டுமே பணியில் இருக்கின்றனர், 26 பணியிடங்கள் காலியாக உள்ளது. 

தமிழகத்தில் 38 மாவட்டங்கள், 219 நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் மற்றும் 125 சீர்திருத்த நிறுவனங்கள் உள்ள நிலையில், குறைந்த எண்ணிக்கையிலான அலுவலர்களால் நீதிமன்ற விசாரணை அறிக்கைகள் தயாரித்தல், நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்படுவோரைக் கண்காணித்தல், கைதிகளின் மறுவாழ்வு உள்ளிட்ட பணிகளைச் சரிவர மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. 

இதையும் படிங்க: பூதாகரமாகும் மதுரை மாநகராட்சி ஊழல்...! முன்னாள் மண்டல தலைவரின் கணவர் அதிரடி அரெஸ்ட்.!!

மேலும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, நன்னடத்தை அலுவலர்களுக்குப் போதிய பயிற்சி, உதவிப் பணியாளர்கள், அலுவலக வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும். 

இதுதொடர்பாக கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி அரசுத் தரப்பு அதிகாரிகளிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, காலிப் பணியிடங்களை நிரப்பவும், கூடுதல் பணியிடங்களின் தேவையை ஆய்வு செய்யவும், மாவட்ட மற்றும் நீதிமன்ற அளவில் நன்னடத்தைப் பிரிவை வலுப்படுத்தவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி வேல்முருகன், கே கே ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக 6 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: பட்டியலினத்தவர்களை காலில் விழ வைத்த விவகாரம்... மதுரை ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளருக்கு பறந்த நோட்டீஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share