முட்டியில் காயம், மார்பில் கடி... வயிற்றில் வெளிர் நில திரவம்..! மதுரை மாணவன் உயிரிழப்பில் திடுக்கிடும் ரிப்போர்ட்..!!
மதுரையில் 11 ஆம் வகுப்பு மாணவன் குட்டையில் சடலமாக அமைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ள நிலையில் அதிர்ச்சியூட்டும் உடற்கூறாய்வு முடிவுகள் வந்துள்ளது.
மதுரை நகரில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கூடல்நகர் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி-யோகலட்சுமி தம்பதியின் மகன் தமிழ்ச்செல்வன், 16 வயது பிளஸ் ஒன் மாணவன். செப்டம்பர் 6ஆம் தேதி காலை கிரிக்கெட் விளையாடச் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் கூடல்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அடுத்த நாள் ஆனையூர் கழிவுநீரேற்று நிலையம் அருகே உள்ள குட்டையில் அவருடைய சடலம் மீட்கப்பட்டது. உடலில் காயங்களுடன் காணப்பட்டதால் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். பிரேதப் பரிசோதனையில் சில முக்கியமான விவரங்கள் வெளிவந்தன. வயிற்றில் சுமார் 100 மில்லி அளவுக்கு வெளிர் பழுப்பு நிற திரவம் இருந்ததாகவும், நுரையீரலில் தண்ணீர் இல்லாததால் மூழ்கி இறந்ததற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர். மார்புப் பகுதியில் கடித்ததற்கான அடையாளங்களும், கைகள் மற்றும் முட்டிகளில் சிராய்ப்புக் காயங்களும் இருந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
இதனால் இது சாதாரண மரணம் அல்ல என்ற சந்தேகம் அவர்களிடம் வலுப்பெற்றது.குடும்பத்தினரின் கூற்றுப்படி, தமிழ்ச்செல்வன் அருகில் வசிக்கும் 10ஆம் வகுப்பு மாணவியுடன் நட்புடன் பழகி வந்தார். இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள். இந்த உறவு மாணவியின் பெற்றோருக்குத் தெரிந்த பிறகு, அவரது தந்தை தமிழ்ச்செல்வனை எச்சரித்திருந்தார். இருவரும் எழுதிய காதல் கடிதங்கள் காவல்துறையினரிடம் கிடைத்துள்ளன. காணாமல் போன நாளில் அந்தப் பெண்ணின் தந்தை தொலைபேசியில் பேசியதாகவும் தகவல்கள் உள்ளன. சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அவர் வந்து சில கருத்துகளைத் தெரிவித்ததாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: இப்படியெல்லாம் கூடவா சாவு வரணும்... நடு ரோட்டில் துடிதுடித்துப் போன 2 மாடுபிடி வீரர்களின் உயிர்... இரவில் நடந்த பகீர் சம்பவம்...!
இதனால் இது ஆணவக் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்துடன் குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர். மார்பில் கடித்ததற்கான அடையாளம் மற்றும் சிறுவனின் கைகள், முட்டியில் சிராய்ப்பு காயங்கள் உள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 16 வயது சிறுவன் ஆணவக்கொலையா? - வயிற்றில் இருந்த ஷாக்கிங் திரவம்... வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை...!