அண்ணா பிறந்தநாளில் அதிரடி... மதிமுகவிற்கு செக் வைத்த மல்லை சத்யா...!
மதிமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்த மல்லை சத்யா, வைகோ மற்றும் துரை வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, கடந்த ஆகஸ்டில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, இன்று முன்னாள் முதலமைச்சரும், திமுக நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய கட்சியைத் தொடங்கி, அதன் கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
மதிமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்த மல்லை சத்யா, வைகோ மற்றும் துரை வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, கடந்த ஆகஸ்டில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இது குறித்து மல்லை சத்யாவிடம் விளக்கம் பெறப்பட்ட நிலையில், "கட்சியின் கொள்கை, நன்மதிப்பு, ஒற்றுமை ஆகியவற்றிற்கு கேடு விளைவிக்கும் வகையில் பொதுவெளியில் கட்சிக்கும், தலைமைக்கும் எதிராகவும் செயல்பட்டார்" என்ற குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதாகவும் இதன் காரணமாக, ம.தி.மு.க சட்ட திட்டங்களின்படி, துணைப் பொதுச்செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் சி.ஏ. சத்யாவை நிரந்தரமாக நீக்குவதாகவும் வைகோ அறிவித்தார்.
இதையும் படிங்க: இதோட விடமாட்டேன்... ஆதரவாளர்களை திரட்டி... வைகோவுக்கு மல்லை சத்யா எச்சரிக்கை...!
இதையடுத்து, அடுத்த கட்டத்தில் அவர் எவ்வாறு செயல்படுவார் என்ற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், இன்று புதிய கட்சி துவங்கிய சத்யா, “கட்சியின் பெயரை நவம்பர் 20 அன்று அறிவிப்பேன்” என்று தெரிவித்துள்ளார். அவருடைய கட்சிக் கொடியில் 75% சிவப்பு, 25% கருப்பு நிறங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், கொடியின் மேல் வலது புறத்தில் ஏழு நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளன.
புதிய கட்சிக்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க, மதிமுகவில் இருந்து விலகிய 15 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் புலவர் சே. செவிந்தியப்பன், செங்குட்டுவன், அழகுசுந்தரம், வல்லம் பசீர், சேலம் ஆனந்தராஜ், இளவழகன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இதற்கிடையில், மறைந்த அண்ணாவின் பிறந்த நாள் விழா மதிமுக சார்பில் திருச்சி சிறுகனூரில் வைகோ, துரை வைகோ உள்ளிட்டோரின் முன்னிலையில் நடைபெற்றது.
இதையும் படிங்க: ச்ச்சீ… 32 வருஷ உழைப்பை உறிஞ்சி சக்கையா தூக்கி போட்டுட்டீங்க! மல்லை சத்யா ஆதங்கம்