கரப்பான் பூச்சி அமைப்பிற்கு பின்னால் இவர்களா?... அகில இந்திய அரசியல் பின்னணியை அம்பலப்படுத்திய மாணிக்கம் தாகூர்...!
'கரப்பான் பூச்சி' போன்ற அந்த அமைப்பு எல்லாம் சும்மா இவர்களாகவே உருவாக்கிவிட்ட ஒரு பிம்பம் ஆகும். பாஜகவின் பின்புலத்தோடு உருவாக்கப்பட்ட இத்தகைய அமைப்புகள் மற்றும் நபர்கள் உண்மையில் மக்களுக்காகப் போராடப் போவதில்லை.
விருதுநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாணிக்கம் தாகூர் கூறுகையில், "வடமாநிலங்களில் பாஜக வலுவாக இருக்கும்போது, நீட் விவகாரத்தில் காங்கிரஸ் வடமாநிலங்களில் மட்டும் போராடுவதாகக் கூறி, ஒரு புதிய நபர் பாஜக ஆதரவோடு போராட்டம் நடத்துவது குறித்துக் கேட்ட கேள்விக்கு. 'கரப்பான் பூச்சி' போன்ற அந்த அமைப்பு எல்லாம் சும்மா இவர்களாகவே உருவாக்கிவிட்ட ஒரு பிம்பம் ஆகும். பாஜகவின் பின்புலத்தோடு உருவாக்கப்பட்ட இத்தகைய அமைப்புகள் மற்றும் நபர்கள் உண்மையில் மக்களுக்காகப் போராடப் போவதில்லை.
எங்களது தலைவர் ராகுல் காந்தி, நீட் தேர்வுப் பிரச்சினையையும், வினாத்தாள் கசிவு விவகாரத்தையும் மிகவும் தீவிரமாகக் கையில் எடுத்து கடந்த ஓராண்டாகத் தொடர்ந்து போராடி வருகிறார். வடமாநிலங்களிலும், நாடாளுமன்றத்திலும் அவர் எழுப்பி வரும் இந்தத் தீவிரப் போராட்டத்தை மடைமாற்றம் செய்வதற்காகவே, பாஜக தங்களுக்குச் சாதகமாகச் சமூக வலைத்தளங்களில் ஆட்களைத் திரட்டி, திடீர் பேனர்களை வைத்துப் புதிய புதிய கட்சிகளையும் அமைப்புகளையும் உருவாக்கி நாடகமாடி வருகிறது.
நீட் தேர்வு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசும்போது மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். இந்தியாவில் உள்ள நீட் பயிற்சி மையங்கள் ஏழை மற்றும் நடுத்தர மக்களிடமிருந்து வசூலிக்கும் பணம், பல மாநில அரசுகளின் கல்வி பட்ஜெட்டை விடப் பெரியதாகும். இந்த நீட் பயிற்சி மையங்கள் ஒரு பெரிய கொள்ளைக் கூட்டமாகவே மாறிவிட்டன. இதனால் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கடுமையான மன அழுத்தம் ஏற்படுகிறது. அதனால்தான் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: வகுப்பறைக்குள் ரீல்ஸ் கலாச்சாரம்... தவெகவுக்கு மாணிக்கம் தாகூர் கட் அண்ட் கறார் அட்வைஸ்...!
ராகுல் காந்தி எழுப்பியுள்ள இந்தத் தீவிரப் போராட்டத்தால் தற்போது தேசிய அளவில் பாஜகவிற்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நீட் விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே, பாஜக தங்களுக்குச் சாதகமாகத் தமிழ்நாட்டில் இத்தகைய புதிய நபர்களையும் கட்சிகளையும் உருவாக்கித் திசைதிருப்பப் பார்க்கிறது" என்று எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "உஜ்வாலா திட்டம்"..! மோடியால் இழைக்கப்பட்ட துரோகம்..! காங். எம்.பி. மாணிக்கம் தாகூர் விளாசல்..!!