×
 

சீட்டு கிடைக்கும்னு நினைச்சோம்! இப்பிடி கவுத்திட்டாரே!! மாணிக்கம் தாகூர் ஆதரவாளர்கள் விரக்தி!

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு பெற்றுத் தருவார் என காங்., எம்.பி., மாணிக்கம் தாகூரை நம்பியிருந்த ஆதரவாளர்கள் தற்போது தனித்து விடப்பட்டுள்ளதாக விரக்தியில் உள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சியில் பெரும் அதிருப்தி நிலவி வருகிறது. குறிப்பாக, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூரை நம்பி தி.மு.க.வுக்கு எதிராக குரல் கொடுத்த ஆதரவாளர்கள் இப்போது தனித்து விடப்பட்ட உணர்வில் விரக்தியடைந்துள்ளனர்.

தி.மு.க. உடன் கூட்டணியில் அதிகாரப் பங்கு கோரி மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட சில காங்கிரஸ் நிர்வாகிகள் தொடர்ந்து பேசி வந்தனர். இதற்கு தி.மு.க. தரப்பில் கடும் விமர்சனம் எழுந்தது. மதுரையில் தி.மு.க. எம்.எல்.ஏ. தளபதி, “பூத் ஏஜெண்ட் கூட ஆள் இல்லாத காங்கிரஸ், ஸ்டாலின் இல்லையென்றால் இண்டி கூட்டணியே இல்லை” என்று கூறியதற்கு மாணிக்கம் தாகூர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தளபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் தலைமையில் மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அங்கு முன்னாள் நகர தலைவர் கார்த்திகேயன் போட்டியிடுவார் எனவும் அவர் பகிரங்கமாக அறிவித்தார். தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அவர் பேச்சுகள் தொடர்ந்தன.

இதையும் படிங்க: காங். வேட்பாளர் தேர்வில் கடும் அதிருப்தி..!! முக்கிய முடிவு எடுத்த மாணிக்கம் தாகூர்..!! அரசியலில் பரபரப்பு..!!

ஆனால் தி.மு.க. - காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்ட பிறகு மாணிக்கம் தாகூர் அமைதியானார். காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் தனது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என அவர் அதிருப்தியடைந்தார். இதில் தி.மு.க.வின் பின்னணி இருப்பதாகவும் அவர் உணர்ந்தார். 

இந்த நிலையில் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக செய்தி பரவியது. பின்னர் அது தவறான தகவல் என மாணிக்கம் தாகூர் விளக்கம் அளித்தார். இந்த குழப்பமான சூழல் காங்கிரஸ் முகாமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணிக்கம் தாகூரை நம்பி தி.மு.க.வை வெளிப்படையாக எதிர்த்த ஆதரவாளர்கள் இப்போது அதிர்ச்சியில் உள்ளனர். அவர்கள் கூறுகையில், “காங்கிரஸில் கோஷ்டி பூசல் பல ஆண்டுகளாக உள்ளது. போராடித்தான் நமது ஆதரவாளர்களுக்கு பதவிகள் கிடைக்கின்றன. 

அதுபோல் நாங்கள் நம்பித்தான் தி.மு.க.வை எதிர்த்தோம். மதுரை வடக்கு தொகுதி கிடைக்காவிட்டாலும், அவர் தனது பதவியில் இருந்துகொண்டே விருதுநகர் உள்ளிட்ட பிற தொகுதிகளில் நமக்கு வாய்ப்பு பெற்றுத் தர முயற்சி செய்திருக்கலாம். இப்போது மதுரையில் தி.மு.க.வினருடன் பிரசாரத்துக்குக் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்று வருத்தம் தெரிவித்தனர்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரஸ் உள்ளே ஏற்பட்டுள்ள இந்த உள் மோதல், கட்சியின் செயல்பாட்டை பாதிக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. மாணிக்கம் தாகூரின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பதை அனைவரும் உற்று நோக்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: ராகுல்காந்தி -பிரியங்கா காந்தி மோதல்?! அசாமில் குழப்பம்! கட்சி தாவும் தலைவர்களால் காங்கிரசார் அதிருப்தி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share