×
 

அச்சமில்லை! அச்சமில்லை!! காங்., எம்.பி கறார்! திமுக கூட்டணிக்கு ஆட்டம் காட்டும் மாணிக்கம் தாகூர்!

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோரி வரும் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் இன்று (பிப்ரவரி 17) அச்சம் இல்லை. அச்சம் இல்லை என பாரதியாரின் பாடலை குறிப்பிட்டு சமூகவலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.

தமிழக அரசியலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் இன்று (பிப்ரவரி 17, 2026) சமூக வலைதளத்தில் பரபரப்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

பாரதியாரின் புகழ்பெற்ற வரிகளை மேற்கோள் காட்டி, "அச்சம் இல்லை.. அச்சம் இல்லை.. அச்சமென்ப தில்லையே" என்று பதிவிட்டுள்ளார். இது கூட்டணி உறவில் ஏற்பட்டுள்ள மோதலை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது.

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் ஆட்சியில் பங்கு கோரி குரல் எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: ராகுல் காந்தியைத் தவிர வேற எந்த... மாணிக்கம் தாகூரை மறைமுகமாக சாடிய ஆர்.எஸ்.பாரதி....! 

குறிப்பாக, விருதுநகர் எம்பியான மாணிக்கம் தாகூர், "எங்களுக்கு மரியாதை கொடுக்காவிட்டால் திருப்பி அடிப்போம். எம்பி, எம்எல்ஏ பதவிகள் மண்ணாங்கட்டி" என்று கடுமையாகக் கூறி வந்தார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் இதை திட்டவட்டமாக மறுத்து விட்டார். "ஆட்சி அதிகாரத்தில் பங்கு தமிழகத்துக்கு ஒத்து வராது" என அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. திமுக தலைமை, காங்கிரஸ் மேலிடத்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

"கூட்டணி நீடிக்க வேண்டுமானால், திமுகவை தீவிரமாக விமர்சிக்கும் மாணிக்கம் தாகூருக்கு கடிவாளம் போட வேண்டும். அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ஒட்டுமொத்த உறவும் முறிந்து விடும்" என திமுக தரப்பு அழுத்தம் கொடுத்துள்ளது.

இந்நிலையில் தான் மாணிக்கம் தாகூர் இன்று பாரதியாரின் "அச்சம் இல்லை" வரிகளைப் பதிவிட்டுள்ளார். இது திமுக அழுத்தத்துக்கு பதிலடி கொடுப்பதாகவும், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் பார்க்கின்றன. ஏற்கனவே காங்கிரஸ் தலைவர்கள் திமுகவின் தவறுகளுக்கு பழி சுமத்த வேண்டியிருப்பதாகவும், மரியாதை இல்லையெனில் பதில் அளிப்போம் எனவும் கூறி வந்தனர்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா? அல்லது பிளவு ஏற்படுமா? என்பது தமிழக அரசியலில் பெரும் கேள்வியாக எழுந்துள்ளது. 2026 தேர்தலுக்கு முன் இந்த மோதல் இரு கட்சிகளுக்கும் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கும் முன் இந்த சர்ச்சை மேலும் வலுப்பெறும் அறிகுறி தெரிகிறது.

இதையும் படிங்க: பங்கு கேட்டா சதினு சொல்லுவீங்களா? முதல்வருக்கு காங்., எம்.பி கேள்வி?! திமுக - காங்., இடையே முற்றும் மோதல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share