"அரசியலை விட்டு விலக தயார்.." - திமுக வேட்பாளர் பரபரப்பு அறிவிப்பு - காரணம் என்ன?
“கிட்னி திருட்டு குற்றச்சாட்டை நிரூபித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு ,அரசியலை விட்டு விலகுவேன்” – மண்ணச்சநல்லூரில் கதிரவன் அதிரடி பேச்சு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் எஸ். கதிரவன் தலைமையில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவெள்ளறையில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர் தொடர்ந்து பொதுமக்களிடம் பேசிய அவர் : எதிர்க்கட்சிகள் தன் மீது முன்வைத்த ‘கிட்னி திருட்டு’ குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்த அவர், தனது மருத்துவமனையில் நடைபெறும் அனைத்து அறுவை சிகிச்சைகளும் அரசு அனுமதி பெற்று சட்டபூர்வமாகவே நடைபெறுகின்றன என்றும். மேலும், யாராவது குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் ₹1 கோடி பரிசுத் தொகையுடன் அரசியலை விட்டு விலகத் தயார் என அதிரடியாக சவால் விடுத்தார்.
இரண்டு நீதிபதிகள் அடங்கிய குழு தனது மருத்துவமனையை ஆய்வு செய்து மருத்துவமனை மீது எந்தவித குற்றமும் இல்லை என அறிக்கை அளித்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளாக, தாம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் வரை தொகுதி மக்களுக்கு தனது மருத்துவமனையில் இலவச சிகிச்சை வழங்கப்படும் .
மேலும், ஒவ்வொரு ஊராட்சியிலும் தலா ஒரு RO குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். ஏரி, குளங்கள் தூர்வாருதல் மற்றும் சுடுகாட்டுப் பாதைகள் சீரமைப்பு போன்ற பணிகளுக்காக ஒவ்வொரு யூனியனுக்கும் JCB மற்றும் Hitachi இயந்திரங்களை தனது சொந்தச் செலவில் வழங்குவேன் .
இதையும் படிங்க: மகளிரை அவமதிக்கிறது அதிமுக..!! EPS மன்னிப்பு கேட்கணும்..! திமுக பெண் நிர்வாகிகள் கொந்தளிப்பு..!
அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி பேசிய அவர், தனது குடும்பத்தின் மூலம் போதுமான சொத்து இருப்பதால் முறைகேடுகளில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை .மேலும், மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசின் மக்கள் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே தனது முக்கிய நோக்கம். இறுதியாக, ‘உதயசூரியன்’ சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: இல்லத்தரசி திட்டம் தான் தேர்தலின் "சூப்பர் ஸ்டார்"..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!