×
 

வீடு, நதி, மின்சாரம்... பட்ஜெட்டில் விஜய் அரசின் Triple Attack..! சட்டசபையை கலக்கிய அதிரடி அறிவிப்புகள்..!!

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் அமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.

தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் மீதான உரையை நிதி அமைச்சர் மரிய வில்சன் நிகழ்த்தினார். எரிசக்தி துறைக்கு 15 ஆயிரத்து 828 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மின் மானிய திட்டத்திற்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு மற்றும் ஆனைமலை ஆறு திட்டங்களுக்கு தமிழக அரசு முன்னுரிமை அளிக்கும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட்டில் போக்குவரத்து துறைக்கு மொத்தம் 13 ஆயிரத்து 561 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. காவிரி வைகை குண்டாறு நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. காவிரி வைகை தாமிரபரணி நதிகள் மறு சீரமைப்பு மற்றும் நதிகள் மீட்புக்காக 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நீர்வளத் துறைக்கு 9,264 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் துறைக்கு 1762 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் குறிக்க தடுப்பணை அமைக்க சாத்தியக்கூறி இருக்கிறதா என ஆய்வு மேற்கொள்ள 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வெற்றி வீடு திட்டத்திற்காக 3500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் சிங்கப்பின் சிறப்பு அதிரடிப்படைக்காக 354 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விஜய் அரசின் முதல் பட்ஜெட்டில் Game Changer திட்டங்கள்... கர்ப்பிணிகளுக்கு குட் நியூஸ்..! ஸ்மார்ட் மூவ்..!!

உள்துறை மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வைத் துறைக்கு 17,290 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஊரக வளர்ச்சி துறைக்கு 39 ஆயிரத்து 69 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் புனித பயண திட்டத்திற்காக 20 கோடி ரூபாயும் நாட்டுப்புற கலைஞர் வாழ்வாதார பாதுகாப்பு திட்டத்திற்காக 23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா கலை மற்றும் பண்பாட்டு துறைக்காக 775 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: தமிழ்நாட்டை மாற்றும் மெகா பட்ஜெட்... AI City முதல் Solar Subsidy வரை..! மாஸ் அறிவிப்புகள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share