×
 

நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை... நீதிபதி பிறப்பித்த முக்கிய நிபந்தனைகள் என்ன தெரியுமா?

யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் கீர்த்தனா குறித்த அவதூறு வழக்கில் கைதான மாரிதாஸை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

யூடியூப்பில் பிரபலமாக இருப்பவர் மாரிதாஸ். வலதுசாரி ஆதரவாளரான இவர் தனது சேனல்களில் தொடர்ச்சியாக ஆளும் தரப்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். திமுக ஆட்சியில் இருந்த போதே, ஆளும் தரப்புக்கு எதிராக வீடியோ வெளியிட்டவர் மாரிதாஸ். அப்போது இவர் கைதும் செய்யப்பட்டு இருக்கிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் தவெக அரசைக் கடுமையாக விமர்சித்து மாரிதாஸ் தொடர்ச்சியாக வீடியோக்களை வெளியிட்டு வந்தார். 

சமீபத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தொடர்பாக மாரிதாஸ் வெளியிட்ட செய்தி இணையத்தில் வைரலானது. ஆனால் அதில் உள்ள புகைப்படம் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதாக தவெகவினர் சோசியல் மீடியாவில் எதிர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறு பரப்பியதாக மாரிதாஸ் மீது சென்னை சைபர் க்ரைம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில், மதுரையில் உள்ள மாரிதாஸின் வீட்டிற்கு நேற்று காலை அதிரடியாக சென்ற சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்தனர். 

இதற்கிடையே மதுரையில் கைது செய்யப்பட்ட மாரிதாஸ் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்தச் சூழலில் தான் இரவு நேரத்தில் மாரிதாஸுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. அவரை போலீசார் ஆஜர்படுத்தப் போது, விசாரித்த நீதிபதி ஜாமீன் வழங்கினார். அமைச்சர் கீர்த்தனா குறித்த அவதூறு வழக்கில் கைதான மாரிதாஸ் விடுவிக்கப்பட்டார். ரூ.10,000 ஜாமீன் தொகை மற்றும் ஒரு வாரம் விசாரணை அதிகாரி முன்பு கையெழுத்திட வேண்டும் ஆகிய நிபந்தனைகளை விதித்து மாரிதாஸுக்கு நீதிபதி ஜாமீன் வழங்கினார்.

இதையும் படிங்க: இனி 9 இல்ல 4 தான்..!! மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் முக்கிய மாற்றம்..!!

இதையும் படிங்க: கியூபாவின் மேற்கு கடல் பகுதியில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம்: ஹவானா முதல் புளோரிடா வரை அதிர்வு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share