கேம் சேஞ்சர் ஸ்டாலின்!! அதிமுகவை மொத்தமாக வளைத்துப் போடும் திமுக! மாஸ்டர் ப்ளான்!
செந்தில் பாலாஜி, ரகுபதி, முத்துச்சாமி, தங்க தமிழ்ச்செல்வன், மனோஜ் பாண்டியன் தற்போது வைத்தியலிங்கம் என அதிமுகவிலிருந்து திமுகவுக்கு சென்ற முக்கிய புள்ளிகளின் பட்டியல் நீண்டு வருகிறது.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவிலிருந்து திமுகவுக்கு முக்கிய தலைவர்கள் இணைவது தொடர்ந்து வருகிறது. செந்தில் பாலாஜி, ரகுபதி, முத்துச்சாமி, தங்க தமிழ்ச்செல்வன், மனோஜ் பாண்டியன் போன்றோரைத் தொடர்ந்து, இப்போது ஒரத்தநாடு எம்எல்ஏ ஆர். வைத்திலிங்கம் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, திமுகவில் இணைந்துள்ளார்.
இன்று (ஜனவரி 21, 2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுக கொடியேற்றினார். அவருடன் அவரது மகன் பிரபுவும் திமுகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வைத்திலிங்கம் டெல்டா மண்டலத்தில் அதிமுகவின் முகமாக இருந்தவர். ஒரத்தநாடு - தெலுங்கன் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த இவர், சென்னை மாநிலக் கல்லூரியில் படித்தபோதே அதிமுகவின் அனுதாபியானார். சசிகலா உள்ளிட்டோரின் ஆதரவால் கட்சியில் வளர்ந்து, எம்எல்ஏ, அமைச்சர், மாநிலங்களவை எம்பி என பல பதவிகளைப் பெற்றார்.
இதையும் படிங்க: முடிவெடுக்க முடியாம திணறும் ஓபிஎஸ்! நானும் திமுக போறேன்!! குன்னம் ராமச்சந்திரன் கொடுத்த ஷாக்!
2011-2016 வரை தொழில்துறை அமைச்சராகவும், வனம் மற்றும் சுற்றுச்சூழல், வீட்டு வசதி துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 2016-2021 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 2021 தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் வெற்றி பெற்றார்.
ஜெயலலிதா காலத்தில் முக்கிய பதவிகளை வகித்த இவர், 2022-இல் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) ஆதரவாளராக மாறி, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின் ஓபிஎஸ் தலைமையிலான 'அதிமுக உரிமை மீட்புக் குழு'வில் ஓபிஎஸ்-க்கு அடுத்த நிலையில் செயல்பட்டார்.
ஆனால் ஓபிஎஸ் கூட்டணி முடிவெடுப்பதில் தடுமாற்றம் காட்டியதால், திமுகவில் இணைந்துள்ளார். இணைப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக சர்வாதிகாரமாக செயல்படுகிறது. ஸ்டாலின் மக்கள் நல முதல்வர். அண்ணா தொடங்கிய தாய் கழகத்தில் திரும்பியுள்ளேன்" என்று கூறினார். வரும் 26-ஆம் தேதி தஞ்சாவூரில் பிரம்மாண்ட இணைப்பு விழா நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
திமுக அமைச்சர்களின் ஏற்பாட்டில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். மனோஜ் பாண்டியன், அன்வர் ராஜா, மருது அழகுராஜ், சுப்புரத்தினம் போன்றோரைத் தொடர்ந்து வைத்திலிங்கம் இணைந்துள்ளார்.
அதிமுகவிலிருந்து திமுக அமைச்சரவைக்கு சென்றவர்களில் முத்துச்சாமி, ரகுபதி, கே.கே.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், எவ.வேலு, பி.கே. சேகர் பாபு போன்றோர் உள்ளனர். செந்தில் பாலாஜி அதிமுகவிலிருந்து அமமுக சென்று பின்னர் திமுகவில் இணைந்தவர்.
மேலும் மாயத்தேவர், விளாத்திகுளம் மார்க்கண்டேயன், கோவை முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், தங்க தமிழ்ச்செல்வன், எஸ்.எம். உதயகுமார், கோவிந்தராஜன், பி.கே. முத்துசாமி, கே. மனோகர், குப்புசாமி, செந்தில்குமார், என். கந்தசாமி, வேலுச்சாமி, பரமசிவம் போன்றோர் திமுகவில் இணைந்துள்ளனர். டிகே நடராஜன், எம்ஜி சேகர், தோப்பு வெங்கடாசலம் போன்ற மாவட்ட செயலாளர்களும் இணைந்துள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 2019 நாடாளுமன்றத் தோல்வி, 2021 சட்டமன்றத் தோல்விக்குப் பிறகு அதிமுக நிர்வாகிகள் பெரும்பாலும் திமுகவில் தஞ்சம் புகுந்துள்ளனர். டெல்டா மண்டலத்தில் வலுவான செல்வாக்கு கொண்ட வைத்திலிங்கத்தின் இணைப்பு திமுகவுக்கு பெரும் வலிமை சேர்க்கும். ஓபிஎஸ் அணி மேலும் பலவீனமடைந்துள்ள நிலையில், தமிழக அரசியல் களம் திமுகவுக்கு சாதகமாக மாறியுள்ளது!
இதையும் படிங்க: முடிவெடுக்க முடியாம திணறும் ஓபிஎஸ்! நானும் திமுக போறேன்!! குன்னம் ராமச்சந்திரன் கொடுத்த ஷாக்!