×
 

மக்கள் சந்திப்பா? மாநாடா? கட்டுக்கடங்காத கூட்டம்! பலத்தை நிரூபித்தாரா செங்கோட்டையன்?

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலம் டோல்கேட் அருகில் தவெக தலைவா் விஜய் பங்கேற்று பேசி வருகிறார்.


ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் இன்று (டிசம்பர் 18, 2025) தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் கட்சித் தலைவர் நடிகர் விஜய் உரையாற்றினார். காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் காலை 9 மணி முதலே ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மக்கள் கூட்டம் திரண்டது பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

கடந்த வாரம் புதுச்சேரியில் நடந்த தவெக பிரசாரக் கூட்டத்தில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு மக்கள் திரளவில்லை. ஆனால் ஈரோட்டில் அதற்கு நேர் எதிராக பிரமாண்டமான மக்கள் கூட்டம் திரண்டது தவெகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் சமீபத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் சொந்த மாவட்டமான ஈரோட்டில் நடைபெறும் இந்தக் கூட்டம் அவரது செல்வாக்கையும் பலத்தையும் நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வரும் விஜய், கொங்கு மண்டலத்தில் முதல்முறையாக இன்று பிரசாரம் செய்தார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு தமிழகத்தில் நடக்கும் மிகப்பெரிய பொதுக்கூட்டமாக இது பார்க்கப்படுகிறது. செங்கோட்டையன் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தக் கூட்டம் தவெகவின் கொங்கு மண்டல செல்வாக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சட்டை பாக்கெட்டில் ஜெயலலிதா படம்!! ஆனால்! ஈரோடு நிகழ்ச்சிக்கு செங்கோட்டையன் கெட்டப் வைரல்!

கூட்டம் நடைபெறும் இடத்தில் நெரிசல் ஏற்படாமல் இருக்க பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வெயில் அதிகமாக இருந்ததால் ஆங்காங்கே கூடாரங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மக்கள் தவெக கொடிகளுடனும், பேனர்களுடனும் உற்சாகமாக கலந்துகொண்டனர். டிரோன்கள் மூலம் கூட்டத்தின் காட்சிகள் பதிவு செய்யப்பட்டன. கூட்டத்தில் முதலில் தவெக நிர்வாகிகள் பேசினர். அதன்பிறகு விஜய் உரையாற்றினார்.

தவெகவினர் இந்தக் கூட்டத்தை செங்கோட்டையனின் வெற்றிகரமான ஏற்பாடாகவே பார்க்கின்றனர். புதுச்சேரி கூட்டத்துடன் ஒப்பிடுகையில் ஈரோடு கூட்டம் தவெகவுக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது என்று கட்சியினர் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: ஈரோடு வரைக்கும் வந்தீங்களே!! கரூருக்கு போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share