×
 

மேயர் பிரியாவுக்கு காலில் காயம்..? சைலண்ட் மோடில் DMK கவுன்சிலர்கள்..! "பனிப்போர்"..!!

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மிகப்பெரிய சிகிச்சை எடுத்து வருவதாகவும் இதனால் முதல்வர் விஜயை சந்திக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று சுமார் பத்து நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் இதுவரை அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்காதது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேச்சாகியுள்ளது. DMK-வைச் சேர்ந்த மேயர் பிரியாவின் இந்த அணுகுமுறை, ஜார்ஜ் கோட்டைக்கும் ரிப்பன் மாளிகைக்கும் இடையே பனிப்போர் இருப்பதாகக் கருதப்படுகிறது. 

முதல்வர் விஜய் பதவியேற்ற நிகழ்ச்சியிலும், அதன் பின்னர் நடைபெற்ற பல அரசு நிகழ்வுகளிலும் மேயர் பிரியா பங்கேற்கவில்லை. இது தொடர்பாக கேள்விகள் எழுந்தபோது, மேயர் பிரியா தரப்பில் இருந்து “அழைப்பு வரவில்லை” என்றும், “அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்கும் போது சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்” என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், மரியாதைக்குரிய ஒரு சந்திப்பு கூட இதுவரை நடைபெறாதது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. துணை மேயர் மகேஷ் குமார் வெளிநாட்டில் இருப்பதாகவும், அதனால் அவரும் சந்திக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்தச் சூழலில் மேயர் பிரியாவுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகின்றன. தேர்தலுக்கு முன்பே ஏற்பட்ட இந்தக் காயத்தால் அவர் விடுப்பில் இருப்பதாகவும், மாநகராட்சி ஆணையருக்கு தகவல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ரிப்பன் மாளிகைக்கு அவர் இரு வாரங்களுக்கும் மேலாக வராதது இந்தக் காயத்துடன் தொடர்புடையதாகக் கூறப்பட்டாலும், அரசியல் காரணங்களும் இருப்பதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

இதையும் படிங்க: கட்சியில் மட்டும்தான் தமிழகம்..! ஆட்சி முழுவதும் சங்கித்தனம்... திமுக விளாசல்..!

மேலும், முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற மாநகராட்சி தொடர்பான ஆலோசனை கூட்டங்கள் அல்லது முக்கிய மதிப்பாய்வு கூட்டங்களில் சென்னை மாநகராட்சியின் DMK கவுன்சிலர்கள் பலரும் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது. மேயர், துணை மேயர் மட்டுமின்றி, ஜோனல் சேர்மேன்கள் உள்ளிட்டோரும் இல்லாதது “சைலண்ட் மோட்” எதிர்ப்பாகப் பார்க்கப்படுகிறது. இது நிர்வாக ஒத்துழைப்பின்மை அல்லது உள் அதிகாரப் போட்டியின் அறிகுறியாக அரசியல் விமர்சகர்களால் விவாதிக்கப்படுகிறது. 

இதையும் படிங்க: "ஒருநாளும் ஓயமாட்டோம்"..! கருணாநிதி பிறந்தநாள் வந்தாச்சு..! தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share