மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டி..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட நான்கு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சுமூகமாக தொகுதி பங்கீடு செய்யப்பட்டது. பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்பட்டது. 164 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மார்ச் 11 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரது முன்னிலையில் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, மதிமுகவுக்கு மொத்தம் நான்கு சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 2021 தேர்தலில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட ஆறு தொகுதிகளைவிட இரண்டு குறைவாகும்.
புதிய கூட்டணிக் கட்சிகள் இணைந்ததால் ஏற்பட்ட சரிசெய்தலாக இது கருதப்படுகிறது.மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட நான்கு தொகுதிகள் மதுரை தெற்கு, மொடக்குறிச்சி, கடையநல்லூர் மற்றும் சீர்காழி ஆகும். இந்தத் தொகுதிகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. மதுரை தெற்கு மதுரை மாவட்டத்திலும், மொடக்குறிச்சி ஈரோடு மாவட்டத்திலும், கடையநல்லூர் தென்காசி மாவட்டத்திலும், சீர்காழி மயிலாடுதுறை மாவட்டத்திலும் அமைந்துள்ளன. இந்த ஒதுக்கீடு கூட்டணியின் பல்வேறு பகுதிகளில் மதிமுகவின் செல்வாக்கைப் பயன்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: திமுக வாக்குறுதிகள் தரமா இருக்கும்… BJP பாதம் தாங்கி EPS..! லெஃப்ட் ரைட் வாங்கிய முதல்வர் ஸ்டாலின்..!!
மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அக்கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட நான்கு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியின்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: எடப்பாடியின் கையில் 70 பேரின் ரத்தக்கறை… முழு சங்கி…! வெளுத்து வாங்கிய முதல்வர் ஸ்டாலின்..!!