×
 

திமுகவுக்கு ஏன் வாக்களிக்கனும்?... முத்து முத்தாய் மூன்று காரணங்களை அடுக்கிய துரை வைகோ...!

கடையநல்லூர் தொகுதியில் சூறாவளி பிரச்சாரம் செய்தார் துரை வைகோ எம்.பி.

தமிழகத்தில் அடுத்து மலரப்போவது மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி.  எனவே ஆளுங்கட்சி உறுப்பினர் இந்த தொகுதியின் எம்எல்ஏ ஆகுவது சிறப்பா அல்லது எதிர்கட்சி உறுப்பினர் இந்த தொகுதியின் எம்எல்ஏவாக வருவது சிறப்பா என்பதை கடையநல்லூர் தொகுதி மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்று திமுக கூட்டணி மதிமுக வேட்பாளர் தி.மு. ராசேந்திரனை ஆதரித்து மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. பிரசாரம் செய்தார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் திமுக கூட்டணியின் மதிமுக வேட்பாளர் தி.மு. ராசேந்திரனை ஆதரித்து மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ கடையநல்லூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.

மேலக் கடையநல்லூர் பகுதியில் மதிமுக வேட்பாளரை ஆதரித்து துரை வைகோ பேசியதாவது-
திமுக கூட்டணிக்கு நீங்கள் 3 காரணங்களுக்காக வாக்கு செலுத்த வேண்டும். முதல் காரணம் திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டுக்கு ஏராளமான நலத் திட்டங்களை கொண்டு வந்துள்ளார். குறிப்பாக தாய்மார்களுக்கு 2021 சட்டமன்ற தேர்தலின்போது மகளிர் உரிமை தொகை  அளிப்பதாக வாக்குறுதி அளித்து அதனை நிறைவேற்றினார்.

இதையும் படிங்க: சம்பள உயர்வு வேண்டும்..!! ஆத்திரத்தில் கொந்தளித்த தொழிலாளர்கள்..!! கலவர பூமியாக மாறிய நொய்டா..!!

இப்போது ரூ. 1000க்கு பதிலாக ரூ. 2000 தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். அடுத்த மனம் கவர்ந்த திட்டம் ரூ. 8 ஆயிரம் கூப்பன். அதை வைத்துக் கொண்டு  உங்களுக்கு தேவையான மிக்சி,  கிரைண்டர் போன்ற எலக்ட்ரிக் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். 3ஆவதாக விடியல் பயணத்தின் மூலம் நகர பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி சென்று வருகிறார்கள். அந்த திட்டம் தொடரும். 

இதேபோன்று தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப் பெண்  திட்டம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி மக்களின் நன் மதிப்பை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான தொகையை ஸ்டாலின் உயர்த்தி அறிவித்துள்ளார். 

இதுபோன்ற சிறப்பான திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. ஒருபக்கம் சமூக நல திட்டங்களை  அரசு ஏற்படுத்தினாலும் மறுபுறம் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கையை தமிழ்நாடு  முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டார். அவரது முயற்சியால் 12 லட்சத்து 37 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
 
இதன் மூலம் இங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இன்றைக்கு இந்தியாவின் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் முதன்மை பெற்றுள்ளது. சுமார் 11.19 விழுக்காடு தொழில் வளர்ச்சி பெற்றுள்ளதாக நிதி ஆயோக் தகவல் கூறுகிறது. ஆனால் தமிழ்நாட்டுக்கு தேவையான மெட்ரோ  ரயில் போன்ற திட்டங்களை  மத்திய அரசு கொண்டுவராமல் உள்ளது. 

உங்களுடைய வேட்பாளர் தி.மு. ராசேந்திரன் தனக்கான அரசு வேலையை ராஜினாமா செய்து விட்டு மக்களுக்காக 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் நலனுக்கு போராடி வரும் வைகோவுக்கு உதவியாளராக மாறினார். அவர் படித்தவர், பண்பாளர். நீங்கள் எளிதாக அணுகும் வேட்பாளராக இவர் இருப்பார். எதிரணி வேட்பாளர் நல்ல மனிதர்தான். 

ஆனால் நீங்கள் ஆளுங்கட்சி உறுப்பினர் இந்த தொகுதியின் எம்எல்ஏ ஆகுவது சிறப்பா அல்லது எதிர்கட்சி உறுப்பினர் இந்த தொகுதியின் எம்எல்ஏவாக வருவது சிறப்பா என்பதை முடிவு செய்ய வேண்டும். 

கடந்த 5 ஆண்டுகளில் எந்த முக்கியமான திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது? பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றியுள்ளார்களா? இந்த ஊருக்கு தேவையான திட்டங்களும் அதற்கான நிதியும் வந்துள்ளதா? அடுத்து வரப்போவது திராவிட மாடல் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு. அப்போது நம்முடைய வேட்பாளர் தி.மு. ராசேந்திரன் வெற்றி பெறும்போது, இந்த பகுதிக்கான திட்டங்கள், மக்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவார். என்று பேசினார்.

இதையும் படிங்க: தளபதி கச்சேரி..! மீண்டும் பெரம்பூரில் விஜய் பரப்புரை..!! ஏற்பாடுகள் மும்முரம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share