கிரீன் சிக்னல் காட்டிய பாஜக... திமுக நிகழ்ச்சியில் மிஸ்ஸான ஆன மதிமுக...!
இந்த திட்டத்துடைய தொடக்க விழாவில் திருமாவளவன், வேல்முருகன் ஆகியோர் பங்கேற்றிருக்கிறார்கள். ரெண்டு பேருமே கூட்டணி கட்சி தலைவர்கள் அண்மை காலங்களில் அரசு மீதான விமர்சனத்தை முன் வைத்திருந்தனர்.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட தொடக்க விழாவில் தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் முக்க ஸ்டாலின் பங்கேற்றிருக்கிறார். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். இந்த திட்டத்துடைய தொடக்க விழாவில் திருமாவளவன், வேல்முருகன் ஆகியோர் பங்கேற்றிருக்கிறார்கள். ரெண்டு பேருமே கூட்டணி கட்சி தலைவர்கள் அண்மை காலங்களில் அரசு மீதான விமர்சனத்தை முன் வைத்திருந்தனர். இதன் மூலம் கூட்டணியில் நீடித்திருப்பதை மட்டுமல்ல, மக்களை தேடி சென்றடையக்கூடிய இத்திட்டத்தின் பலனையும் தேர்தலில் அறுவடை செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அதேசமயம் நேற்று இந்த நிகழ்ச்சியில் மதிமுக மிஸ் ஆகியிருப்பது, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட நிலையில் மதிமுக மட்டும் கலந்துகொள்ளவில்லை. திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று (ஜூலை14) மாலை 6.10 மணியளவில் தாம்பரத்தில் இருந்து ராமேஸ்வரம் எக்ஸ்ப்ரஸ் ரயிலில் புறப்பட்டுச் சென்றார்.
தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் இந்திய மனித உரிமைக் கட்சியை தொடங்கியவருமான மறைந்த எல்.இளையபெருமாளின் சிலையை சிதம்பரத்தில் திறந்து வைத்தார். இந்தநிகழ்ச்சியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.பி.விஷ்ணுபிரசாத், காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் அழகிரி, மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், எம்.பி.ரவிக்குமார், எம்.எல்.ஏ.சிந்தனை செல்வன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கொஞ்சம் விஷம் வாங்கி கொடுத்திருக்கலாமே! உங்க பையனுக்காக நான் துரோகியா? மனம் உடைந்த மல்லை சத்யா..!
இதில் மதிமுகவில் இருந்து யாரும் கலந்துகொள்ளவில்லை. மதிமுக பொருளாளர் செந்தில் அதிபன் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர்கூட சிதம்பரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு செல்லவில்லை.
ஏற்கனவே பாஜகவைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், திமுக கூட்டணியில் இருந்து வைகோ வெளியே வரும் நிலையில் இருக்கிறார் என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருந்தார். இதனிடையே மதிமுக உட்கட்சி பிரச்சனைக்கு திமுக தான் காரணம் என்பது போல் தொண்டர்களிடையே பேச்சு கிளம்பியுள்ளதாகவும், இதனால் துரைவைகோவும், வைகோவும் கூட்டணி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நன்றியை மறந்துவிட்டு பேசக்கூடாது.. வைகோ பேச்சுக்கு ஜெயக்குமாரின் தரமான பதிலடி..!