“பதவி விலகுகிறேன்...” - உதயநிதி ஸ்டாலினுக்கு ஓபன் சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா...!
மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு விடுத்துள்ள சவால் அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இந்த தொகுதியில் தவெகவை விட திமுக வேட்பாளர் ஒரு வாக்கு அதிகமாக வாங்கினாலும் நான் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருக்கிறது. திமுக, அதிமுக, தவெக, இடதுசாரிகள், நாதக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு விடுத்துள்ள சவால் அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: துணை முதல்வர் பதவி... சீமான் மனைவியிடம் டீல் பேசிய ஆதவ் அர்ஜுனா... கடைசியில் நடந்த ட்விஸ்ட்...!
“தம்பி, நீ எங்க தலைவர் லெவலுக்கெல்லாம் பேச வேண்டாம். முதல்ல எங்களுக்கு பதில் சொல்லு. நான் இங்கிருந்து சவால் விடுக்கிறேன். மதுராந்தகத்தில் நீ ஜெயிச்சுட்டேன்னா, நான் என்னுடைய பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா பண்ணிடுறேன்.
நான் இந்த சவாலை விடுக்கிறேன். தமிழக வெற்றிக் கழகத்தோட பொதுச்செயலாளர் பதவியிலிருந்து இந்த சவாலை விடுக்கிறேன்.
இன்னும் தேர்தலுக்கு ஒரு வாரம்தானே இருக்கு? பிரசாரம் பண்ணுங்க. உங்க அப்பாவைக்கூட கூட்டிட்டு வாங்க. ஏன், உங்க தாத்தாவைக்கூட கூட்டிட்டு வாங்க. மதுராந்தகத்துக்கு வாங்க.
ஆனா, இளவரசு உதயநிதி, நீ தோத்துட்டன்னா உன்னுடைய கட்சிப் பதவிகள் எல்லாத்தையும் ராஜினாமா பண்ணத் தயாரா? நான் சவால் விடுறேன். நாங்க சவால் விடுறோம்.
எங்க அண்ணனை இந்தத் தொகுதியில ஜெயிக்க வச்சுக் காட்டுங்க. மதுராந்தகத்துல தமிழக வெற்றிக் கழகத்தோட பொறுப்பாளரா எங்க அண்ணனை போட்டிருக்காரு. அக்கா இங்க இருக்காங்க. நம்ம ராஜ்மோகனும் இருக்காரு. இவங்க எல்லாருமே எளிய வீட்டுப் பிள்ளைங்க.
நீங்கதான் 70 வருஷ கட்சின்னு சொல்றீங்க. நீங்கதான் பெரிய ஆலமரமா வளர்ந்திருக்கீங்க. உங்களுக்குத்தான் அரசியல் தெரியுமே. உங்களுக்குத்தான் தேர்தல் அரசியல் தெரியுமே. உங்ககிட்டதான் பணபலமும் இருக்கு.
அப்படின்னா, மதுராந்தகத்துல தமிழக வெற்றிக் கழகத்தைவிட ஒரே ஒரு ஓட்டு கூடுதலா வாங்கிக் காட்டுங்க, உதயநிதி அவர்களே.
ஒரே ஒரு ஓட்டு கூடுதலா வாங்கிட்டு, எங்க முதலமைச்சர் விஜய் அண்ணனைப் பார்த்துப் பேச அடுத்ததாக வாங்க. முதல்ல இங்க போட்டியிட்டு ஜெயிச்சுக் காட்டுங்க.” என்றார்.
இதையும் படிங்க: "ஒரு பொருட்டே இல்ல"..! கம்யூனிஸ்ட்கள் குறித்து விமர்சனம்..! அமைச்சர் ஆதவிற்கு முத்தரசன் பதிலடி..!!