×
 

திமுக டெபாசிட் இழக்கும்..! இன்ஸ்டாவை வைத்தே அவங்கள முடிச்சிட்டோம்..! அமைச்சர் ஆதவ் பேச்சு..!!

திமுக டெபாசிட் இழக்கும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதிப்பட தெரிவித்தார்.

மதுராந்தகம் தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் பாக முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது என்று விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். வெறும் இன்ஸ்டாகிராமை வைத்தே திமுகவை முடித்து விட்டோம் என்றும் தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது எனவும் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் இடைத்தேர்தலிலும் வாக்கிற்கு பணம் கொடுக்க மாட்டோம் எனவும் உறுதிப்பட கூறினார்.

காசு கொடுத்ததால் தான் ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்தாரா எனவும் கேள்வி எழுப்பினார். திமுகவும் அதிமுகவும் இணைந்து எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக பேசினார்கள் என்று தெரிவித்தார். மதுராந்தகம் தொகுதிகள் வாக்கிற்கு 10,000 கொடுத்தாலும் திமுக டெபாசிட் இழக்கும் என்று உறுதிப்பட அமைச்சர் தெரிவித்தார். எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் போட்டியிட்டு இருந்தால் எடப்பாடி பழனிச்சாமி தோற்று இருப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரை மதுராந்தகம் தொகுதி வேட்பாளராக நிற்க வைக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்றும் எம்ஜிஆர் ஜெயலலிதா விசுவாசிகள் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருப்பதாக கூறினார். தமிழக வெற்றி கழகம் காணாமல் போகும் என்று சொன்னவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டதாக குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: " தாராபுரம் அதிமுக கோட்டை..! எந்த கொம்பனாலும் ஒண்ணும் பண்ண முடியாது"..! திண்டுக்கல் சீனிவாசன் திட்டவட்டம்..!!

தமிழக வெற்றிக் கழகம் எப்படி வென்றது என இப்போதும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறது திமுக எனவும் 2026 தேர்தலில் அதிமுகவினர் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்தார்கள் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடந்ததா இல்லையா என்றும் கேள்வி எழுப்பினார். திமுக ஊழல் செய்யவில்லை என கம்யூனிஸ்ட் தோழர்களால் சொல்ல முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார். 

இதையும் படிங்க: சாலையில் இல்லை... சதுப்பு நிலத்தில்..! கான்க்ரீட் சாலை குறித்து சவுமியா அன்புமணி உரை.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share