'ப' வடிவில் பள்ளி இருக்கைகள் ஏன்..? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
ப வடிவத்தில் மாணவர்கள் அமர வைப்பது சோதனை முயற்சிதான் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
யார் சொன்னால் செய்வார்கள் யார் வெற்று அறிவிப்பு விடுவார்கள் என மக்களுக்கு நன்றாக தெரியும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஓரணியில் தமிழ்நாடு பரப்புரைக்காக திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் வார்ரூமை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்.
வார்ரூம் செயல்பாடுகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அறிவித்த திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது என்று கூறினார். மேலும் பள்ளி வளாகங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ப வடிவத்தில் மாணவர்கள் அமர வைப்பது சோதனை முயற்சிதான் எனவும் தெரிவித்தார்.
நம்பிக்கை தானே யாரு சொன்னா செய்வா இல்ல யார் சொல்றது வந்து வெறும் வெத்து அறிவிப்பாக இருக்கும் என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். கண்டிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதைச் செய்வார்கள் என்ற நம்பிக்கையை மக்கள் வைத்திருக்கிறார்கள், அதனை நாங்களும் செய்து வருகிறோம் என்றார். இனி அவங்க 1,500 தர்றேன், 2000 தர்றேன், 3000 தரேன் என்று சொன்னாலும் அத மக்கள் கண்டிப்பாக நம்ப மாட்டார்கள்.
இதையும் படிங்க: “அங்கேயும் போவோம், அநியாயத்தை சொல்லுவோம்” ... பாஜக, அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த அன்பில் மகேஷ்...!
பேக்பெஞ்ச் அப்படிங்கறதுல்லாம் கிடையாது, எந்த பெஞ்சல உட்கார்ந்தாலும், படிக்கிற பிள்ளைங்க படிப்பாங்க. அறிவாளி பிள்ளைங்க கூட பேக் பெஞ்ல இருந்துல்லாம் வந்திருக்காங்க. அதெல்லாம் கடந்து நம்ம டீச்சர்ஸ் பொறுத்தவரைக்கும் லெக்சரிங் பேசிஸ்ல இல்லாம ஒரு கான்வர்சேஷன் ஒரு இன்டராக்ஷனா இருக்கணும் பிள்ளைங்க கிட்ட அதுக்காக தான் இந்த ப வடிவ வகுப்பறையை மாற்றப்போறோம்.
இதையும் படிங்க: மத நம்பிக்கையில் யாரும் தலையிடல; ஆனால் கட்டாயப்படுத்தக் கூடாது... ஸ்ட்ரிக்டாக சொன்ன அன்பில் மகேஸ்!!