ஒரு லிஸ்டே என்கிட்டே... அதை என்ன செய்ய வச்சிடாதீங்க... அரசு ஊழியர்களை நேருக்கு நேர் எச்சரித்த அருண்ராஜ்...!
தயவு செய்து பணி மாறுதல் வாங்கி சென்று விடுங்கள் இல்லையென்றால் சந்தோஷமாக நானே வாங்கித் தருகிறேன் என திருச்செங்கோட்டில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேச்சு
ஏழை எளிய மக்களின் வலியை புரிந்து கொண்டு பணம் வாங்காமல் பணியாற்ற வேண்டும் பணம் வாங்க மாட்டேன் என்பதை கூறி மக்களை அலைக்கழிக்க கூடாது. லஞ்ச ஒழிப்பு துறையில் சிக்கிக் கொள்ளாதீர்கள் உங்கள் குடும்பம் வீணாகிவிடும் உங்களுக்கும் மன உளைச்சல் ஆகிவிடும். லஞ்ச ஒழிப்பு துறையில் சிக்கிக் கொண்டு என்னிடம் உதவிக்கு வராதீர்கள். தங்களால் இது போன்ற சின்ன சின்ன விஷயங்களை செய்ய முடியாது என்றால் தயவு செய்து பணி மாறுதல் வாங்கி சென்று விடுங்கள் இல்லையென்றால் சந்தோஷமாக நானே வாங்கித் தருகிறேன் என திருச்செங்கோட்டில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேச்சு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண்ராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மதுபாலன் முன்னிலையில் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், குடிநீர் வழங்கல் வடிகால் வாரியம், வேளாண்மைத்துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சமூக நலத்துறை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணி, பள்ளிக்கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மாவட்ட வழங்கல் அலுவலகம், கூட்டுறவுத்துறை, ஆவன், திருச்செங்கோடு நகராட்சி, மல்லசமுத்திரம் பேரூராட்சி, மாவட்ட விளையாட்டு அலுவலகம், தொழிலாளர் நலத்துறை, டாஸ்மாக், வணிகவரி துறை, உதவி இயக்குநர் (கனிம வளம்) ஆகிய துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் அருண்ராஜ் கூறியது எம்எல்ஏக்கள் நிதி, அமைச்சர் நிதி என எதுவுமே கிடையாது. இங்கு யாராச்சும் லஞ்சம் வாங்கறாங்க காலதாமதம் செய்கிறார்கள் என எந்த புகார்களும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். முதலமைச்சர் எங்களோட அமைச்சரவை கூட்டத்தில் ஏற்கனவே சொல்லி இருக்கிறார். எந்த லஞ்ச புகார் வரக்கூடாது. அப்படி ஏதேனும் புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சொன்னார். அதையே தான் நான் திரும்பவும் உங்களுக்கு சொல்கிறேன். இந்த அரசு மக்களுக்கான அரசு முன்னாடி எல்லாம் எப்படி நடந்தது என்பது உங்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும் ஏனென்றால் நானும் ஒரு அரசு அதிகாரியாக இருந்து 15 ஆண்டுகாலம் பதவியில் இருந்து கொண்டு தான் வந்திருக்கிறேன்.
இதையும் படிங்க: அறிவிப்பு செயலாகும்போது தான் மாற்றம்..! மூடப்பட்ட 717 மதுக்கடை லிஸ்ட்... மாணிக்கம் தாகூர் பெருமிதம்..!
அதனால பழசை எல்லாம் மறந்திடுங்கள் எனவும், எப்படி நடந்து இருக்கிறோம் எந்த ஸ்டைல்ல பண்ணனும் அதை எல்லாம் தூர ஒதுக்கி வைத்து விடுங்கள். வெளிப்படையான நேர்மையான அரசு மட்டும்தான் இங்கு நடக்கும். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் எல்லாம் பார்த்திருப்பீர்கள். பத்திரவு பதிவு துறையில் பார்த்திருப்பீர்கள். இந்த மாதிரி ஒரு சோதனை லஞ்ச ஒழிப்புத்துறை இருந்து நடக்கும் நேர்மையாக இருந்து கொள்ளுங்கள். அது மாதிரியான சோதனைகள் நடந்தால் உங்கள் குடும்பத்தையும் உங்கள் வாழ்க்கையும் பெரிய வேதனைக்கு உள்ளாக்கிவிடம். மன உளைச்சல் ஆகிவிடும் நம் குடும்பத்திற்காக தான் ஓடிக்கொண்டிருக்கின்றோம். பெரிய வீடு கட்டிட்டு சந்தோசமா இல்லைனா என்ன நமக்கு நிம்மதியும் சந்தோசம் தான் முக்கியம். அதுக்குத்தான் எல்லோருமே பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். சந்தோஷத்திற்கு பணம் தேவை தான் இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் உண்மையான சந்தோசம் நம் எதிர்பார்க்காமல் ஒருத்தருக்கு உதவி செய்கிறோம் என்றால் அது எதை எதிர்பார்த்து உதவி செய்யறாங்க அப்படிங்கறது சொல்லி பண்றது தான்.
மக்கள் காய்ச்சலோடு வலிகளோடு வருகின்றனர். அவர்களுக்கு சேவை செய்யத்தான் நமக்கு அரசு பணிகள் வழங்கப்பட்டுள்ளது. சின்ன சின்ன விஷயங்களுக்காக ஆசைப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டால் யாராலையும் உதவி செய்ய முடியாது. தயவு செய்து இது போன்ற விஷயங்களுக்கு என்னிடம் வந்து விடாதீர்கள் எனவும் கூறினார்.
திருச்செங்கோட்டில் என்னென்ன பிரச்சனைகள் இருக்குன்னு ஒரு லிஸ்ட் என்னிடம் உள்ளது. முழு விவரங்களும் எனக்கு தெரியும். அதை எல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை. பணம் வாங்கலைன்னு மட்டும் மக்களை அலை கழிக்க வைக்க கூடாது. மக்கள் வந்தார்கள் என்றால் உடனடியாக நீங்கள் அந்தப் பணிகளை முடித்துக் கொடுத்து விடுங்கள. மக்கள் வரிப்பணத்துல தான் நம்ம சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிறோம் என்பதை மனதில் நினைத்து ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். டாஸ்மார்க்ல ஒரு கேசுக்கு இவ்வளவுன்னு வாங்கிகிட்டு இருந்தாங்க, அதை எல்லாம் நிறுத்த முடியுமா என்பது கடவுள் கூட நினைக்கவே இல்லை. அந்த பெரிய விஷயத்தை நாம் சாதித்து காட்டி இருக்கிறோம். இது மாதிரியான ஒரு அரசு இந்த அரசின் முதலமைச்சரின் கீழ் நாம் எல்லோரும் வேலை செய்கிறோம் என்பதை நினைத்து பெருமை கொள்ள வேண்டும். இல்லை இது எல்லாம் கஷ்டமா இருக்குன்னு நீங்க நினைச்சீங்கன்னா, தயவு செய்து பணி மாறுதல் வாங்கி சென்று விடுங்கள் . சந்தோசமா நானே பணி மாறுதல் வாங்கி தருகிறேன் என அமைச்சர் அருள்ராஜ் கூறினார்.
இதையும் படிங்க: மக்கள் முன்னாடியே தூக்குல போடணும்..! தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்கணும்..! வேல்முருகன் வலியுறுத்தல்..!