×
 

கயிறு அறுந்ததும் தரையில் விழுந்த அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்... சேலம் விளையாட்டு விழாவில் பரபரப்பு!

சேலம் தனியார் பள்ளி விளையாட்டு விழாவில் கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்ற அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், கயிறு திடீரென அறுந்ததால் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற பள்ளி விளையாட்டு விழாவில் கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்ற அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், கயிறு திடீரென அறுந்ததால் கீழே விழுந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஹோலி கிராஸ் தனியார் பள்ளியில் இன்று விளையாட்டு விழா நடைபெற்றது. இந்த பள்ளியின் முன்னாள் மாணவரான பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் மாணவர்கள், பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்களுக்காக நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளையும் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கான கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவர்கள் அணியில் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வனும் உற்சாகமாக கலந்து கொண்டு கயிறை இழுத்தார். இரு அணியினரும் வெற்றிக்காக முழு பலத்துடன் போட்டியிட்டுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கயிறு திடீரென அறுந்தது.

இதையும் படிங்க: சேலத்தில் பரபரப்பு... பணத்துக்காக மொட்டை அடித்த பெண்கள்..! தலைமறைவான மோசடி ஆசாமி..!!

கயிறு அறுந்த வேகத்தில் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், அவருடன் போட்டியில் பங்கேற்ற 15-க்கும் மேற்பட்டவர்களும் சமநிலையை இழந்து தரையில் விழுந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு இருந்தவர்கள் சில நொடிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் அமைச்சரை எழுந்து நிற்க உதவி செய்தனர்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிது நேரத்தில் அனைவரும் இயல்பு நிலைக்குத் திரும்பியதுடன், விளையாட்டு விழாவும் தொடர்ந்து நடைபெற்றது.

எதிர்பாராத இந்த நிகழ்வு அங்கு இருந்த மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியது. குறிப்பாக அமைச்சர் போட்டியில் நேரடியாக கலந்து கொண்டு உற்சாகமாக விளையாடியதும், அதன்பின் நிகழ்ந்த இந்த சம்பவமும் சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது. நிகழ்வின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

இதையும் படிங்க: 50+ பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த தவெக பிரமுகர் மீண்டும் கைது... ஜாமீனில் வெளியே வந்தவரை தட்டித்தூக்கிய போலீஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share