அதிமுக ஆட்சியில் 65 பேர் உயிரிழப்பு... எடப்பாடி பழனிச்சாமியை எகிறி அடித்த மா.சு...!
நாட்டிலேயே எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோதுதான் டெங்கு காய்ச்சலால் அதிகம் பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் தற்போது வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பருவமழையினால் அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தி பெருகியுள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் இது குறித்து கருத்து தெரிவித்திருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுக பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பதிலடி கொடுத்துள்ளார். தஞ்சையை அடுத்துள்ள தென்னங்குடி கிராமத்தில் வீடு தேடி மருத்துவம் திட்டத்தில் 2 கோடியே 50 ஆவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை வழங்கிய அமைச்சர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், முதல்வரின் இந்த சிறப்பான திட்டத்தால் ஐநா விருது பெற்றது உலகிலேயே தமிழகத்தில் தான் தொற்றாநோய்க்கான மருந்துகளை அரசு வீடு தேடி சென்று பயனாளிகளுக்கு வழங்குகிறது என்று ஐ.நா. சபை பாராட்டி விருது வழங்கியுள்ளது என்றார்.
இதையும் படிங்க: போலி வாக்குகளை செருகுவதில் திமுக தீவிரம்... தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்...!
இந்த திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு மாதம் தோறும் 10 ஆயிரம் ரூபாய் வரை செலவு குறையும் என்றார். டெங்கு பாதிப்பு அதிகம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே என்கிற கேள்விக்கு,அ.தி.மு.க ஆட்சியில் தான் எடப்பாடி முதல்வராக இருந்த போது தான் டெங்கு காய்ச்சலால் 65 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார்.
தற்போது வைரஸ் காய்ச்சல் ஏற்படுவது தான் பிரச்னை பிரச்னை இல்லை என்றார். அடுத்து 3 புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்களை திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: #BREAKING "காங்கிரஸை கலைத்துவிடுங்கள்..." - அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்...!