"குஷ்பூ மாதிரி சல்லி சொல்லுறதுக்காக... " - ஆத்திரத்தில் வார்த்தையை விட்ட அமைச்சர் மனோ தங்கராஜ்...!
அரசியலில் இருந்து விலக ராகுல்காந்தி மேலும் ஒரு காரணமும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது என்ற தமிழக பாஜக துணைத் தலைவர் குஷ்புவின் எக்ஸ் தள பதிவு
குஷ்பூ எல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக பேச கூடிய ஆள். இந்த சல்லிகள் செல்லவது கேட்டு கிட்டு ராகுல்காந்தி அரசியலை விட்டு ஒதுங்கணுமா? அதுக்கு என்ன தேவை இருக்கிறது. பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் மணலிக்கரை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வைத்து மாவட்டத்தில் உள்ள 140, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 14025- மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் அழகுமீனா முன்னிலையில் மிதிவண்டிகளை வழங்கிய பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
இதையும் படிங்க: பீகார் முதமைச்சர் யார்? - நீடிக்கும் மர்மம்... போட்ட உடனேயே டெலிட் ஆன ட்வீட்டால் பரபரப்பு ...!
அப்போது பீகார் தேர்தல் இந்தியா கூட்டணி தோல்வி குறித்த கேள்விக்கு, இதில் என்ன படுபாதாளம் என்று சொல்கிறீர்கள்? எஸ்ஐஆரில் என்னென்ன மோசடிகள் நடந்துள்ளது என்பதை வெட்ட வெளிச்சமாக சொல்லிவிட்டோம். ராகுல் காந்தி குறிப்பிட்டிருக்கிறார்கள்.பொறுத்திருந்து பார்ப்போம். இது தேசத்திற்கு ஒரு அச்சுறுத்தல் தான் இது ஒரு சாதாரண விஷயம் இல்லை என்றார்.
அரசியலில் இருந்து விலக ராகுல்காந்தி மேலும் ஒரு காரணமும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது என்ற தமிழக பாஜக துணைத் தலைவர் குஷ்புவின் எக்ஸ் தள பதிவு குறித்த கேள்விக்கு, குஷ்பூ எல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதி பேச கூடிய ஆள். கொஞ்ச காலத்துக்கு முன்பாக என்ன பேசினார்கள்?.
ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு நிலைப்பாடு. தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக முடிவு எடுத்து பேசக்கூடியவர். அவர் பேசுகின்ற கருத்துக்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.ஒரு கருத்து என்பது நிரந்தரமாக இருக்க வேண்டும்.
ராகுல் காந்தி ஒரு பெரிய பாரம்பரியமும், பின்னணியையும் கொண்டவர். இந்த சுதந்திரத்துக்காக அல்லல்கள் பல பட்ட ஒரு குடும்பத்தை சார்ந்தவர். இந்த சேதத்துடைய அரசியல், சமூக, பொருளாதர நிலையை நன்கு கற்று அறிந்து இருக்க கூடியவர். அவர் எல்லாம் இந்த சல்லிகள் செல்லவது கேட்டு கிட்டு அரசியலை விட்டு ஒதுங்கணுமா? அதுக்கு என்ன தேவை இருக்கிறது? என கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டில் ஒண்ணும் வராது தமிழ்நாட்டில் பிஜேபி விலாசம் இல்லாமல் போய் கொண்டு இருக்கிறது.கடந்த இரண்டு பார்த்து பார்த்து கொண்டு இருக்கிறீர்கள். நாங்க உண்மை பேசியதால் பிஜேபி வயிற்றில் புளியை கரைத்து கொண்டு அழுது கொண்டும், ஓடி கொண்டு இருக்கிறார்கள். அவதூறு பேசுகிறார்கள்.
பெருந்தலைவர் காமராஜர் வீட்டை எரித்தார்கள். இதை மாற்றி செல்ல முடியுமா? ஆமாம் எரித்தோம் என்று செல்ல வேண்டியது தானே, அதற்கு தைரியம் இல்லாம போராட்டம் எல்லாம் பேசி கொண்டு இருக்கிறார்கள். எனவே வரலாற்றை மாற்றுகின்ற சரித்திரத்தை மாற்றுகின்ற எதற்கும் மக்களை வந்து தங்களுடைய சுயலாபத்திற்காக பயன்படுத்திகின்ற ஒரு கோவலமாக அரசியலை பிஜேபி செய்து கொண்டு இருக்கிறது. இது நாட்டுக்கே ஒரு சாபகேடு தான் என்றார்.
இதையும் படிங்க: வரலாற்று வெற்றி! பிரதமர் மோடி, நிதிஷ் குமார் மீதான நம்பிக்கையின் முத்திரை... ஜே. பி. நட்டா பெருமிதம்...!