×
 

அதிமுக ஆட்சியில் தீபாவளிக்கு பட்டுப்புடவை கொடுக்காதது ஏன்? - இபிஎஸுக்கு திமுக அமைச்சர் சுளீர் கேள்வி...!

இலவச வேட்டி சேலை குறித்த, எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் முத்துசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். 

 இலவச வேட்டி சேலை தமிழகத்தில் சரியாக வழங்கப்படவில்லை என்ற எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டை, வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி மறுத்துள்ளார். தீபாவளிக்கு பட்டு புடவை வழங்குவதாக கூறும் எடப்பாடி பழனிசாமி, ஏற்கனவே ஆட்சியில் இருந்த போது வழங்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மூன்று நாள் கைத்தறி கண்காட்சியை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அத்திகடவு அவிநாசி திட்டத்தில் மொத்தமுள்ள 1045 குளங்களில்,  219 குளங்களை தவிர எஞ்சிய 826 குளங்களுக்கு சீராக தண்ணீர் செல்கிறது. 86  feeder லைன் இணைப்பு குழாய்களில் பிரச்சனை உள்ளது. சிறு சிறு குழாய்கள் உடைபட்டு மண் தேங்கியதால் 219 குளங்களிக்கு தண்ணீர் செல்வது பாதிக்கப்பட்டுள்ளத்து. இந்த திட்டத்தை செயல்படுத்திய ஒப்பந்த நிறுவனம் அதனை சரிசெய்து வருகிறது. இந்த திட்டத்தின் படி ஆண்டுக்கு 70 நாட்கள் மட்டுமே தண்ணீர் பம்பிங் செய்யப்படுகிறது, மற்ற நாட்களில் பயன்படுத்தாததால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு மாற்று வழியை ஆய்வு செய்து வருகிறோம்.

இலவச வேட்டி சேலை திட்டத்தில் முறையாக வழங்கப்படவில்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அவர், கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில் முறையாக இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது என்றார்.  ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு தீபாவளிக்கும் பட்டுப்புடவை பெண்களுக்கு வழங்குவதாக கூறும் எடப்பாடி பழனிசாமி, ஏன் அதை இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த போது வழங்கவில்லை. இதே போன்ற அவர் பெண்களுக்கு 1500 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்கிறார். ஏன் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தபோது அதை அவர் வழங்கவில்லை.

இதையும் படிங்க: கம்யூனிஸ்டுகளை குறிவைக்கும் இபிஎஸ்..! கொந்தளித்த முத்தரசன்..!

முதன் முதலில் திட்டத்தை அறிவித்தவர் முதலமைச்சர் தான் சட்டமன்றத்தில் திட்டம் குறித்த எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பிய போது அனைவருக்கும் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்து அதன் படி 1.15 கோடி பெண்களுக்கு வழங்கி வருகிறார். தற்போது கூட தகுதி உள்ள விடுபட்ட பெண்களுக்கு உரிமை தொகை வழங்க உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் மனுக்கள் வாங்கப்படுகின்றன தகுதி உள்ள பெண்களுக்கு வழங்கப்படும் என்றார்.. 

இதையும் படிங்க: போயும் போயி குப்பைக்கு வரி போட்ட அரசு... திமுகவை டாரு, டாராக கிழித்த எடப்பாடி பழனிசாமி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share