×
 

ஆயிரம் பேர்ல 600 பேர் திமுக தான்... இபிஎஸ்-க்கு அமைச்சர் முத்துசாமி தக்க பதிலடி..!

அனைவருக்கும் மரியாதை தரக்கூடிய கட்சியாக திமுக உள்ளது என எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு அமைச்சர் முத்துசாமி பதிலடி கொடுத்துள்ளார். 

ஈரோட்டில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு மாவட்டத்தில் 1169 பள்ளிகளில் 55,942 மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தினால், மாணவர்களின் இடைநிற்றல் குறைந்து மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது என்றார்.

திமுக-வில் உழைப்பவர்களுக்கு மரியதை கிடைக்காது. அதிமுக-வால் அடையாளம் காட்டி, அங்கு சென்றவர்களுக்குதான் மரியாதை கிடைக்கிறது. அமைச்சர்களில் 8 பேர் எட்டப்பன்களாக மாறி அங்கு சென்றுள்ளனர் என்ன எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, “திமுக அமைச்சர்கள் சான்றிதழ் எதிர்பார்ப்பது மக்களிடம் தான்.. எதிர்கட்சிகளிடம் இல்லை. திமுகவில் உழைப்பவர்களுக்கு நல்ல மரியாதையை முதலமைச்சர் தந்து கொண்டிருக்கின்றார்.  திமுகவில் லட்சக்கணக்கானோர்  55 சதவீதத்திற்கும் மேலாக மக்கள் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். ஆயிரம் பேரில் 600 பேர் கட்சியில் சேர்கின்றனர். அனைவருக்கும் நல்ல மரியாதை தரக்கூடிய கட்சியாக திமுக உள்ளது என்றார்.

இதையும் படிங்க: விஜய் மச்சான்! உங்க அப்பன் கிட்ட கேட்டுப்பாரு திமுக- னா என்னனு! விளாசும் திமுகவினர்

இதையும் படிங்க: NDA கூட்டணி ஒரு துரோக கொத்தடிமை கூட்டணி! திமுக கடும் குற்றச்சாட்டு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share