×
 

பிரதமர் பதவிக்கு இதெல்லாம் அழகா?... யாரோ எழுதிக்கொடுத்ததை... அமைச்சர் முத்துசாமி பதிலடி...!

ஆதாரமில்லாமல்  குற்றச்சாட்டுகளை சொல்வது பிரதமர் பதவிக்கு சரியானதல்ல என அமைச்சர் முத்துசாமி  விமர்சனம்

ஈரோடு சூரம்பட்டி மற்றும் ஆசிரியர் குடியிருப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் அமைச்சர் முத்துசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, கட்சியினர் விரும்பினால் ஆரம் ஆடம்பரம் இல்லாமல் மற்றவர்கள் பயன்பெறும் வகையில் பிறந்த நாளை கொண்டாட முதலமைச்சர் அறிவுறுத்தியதின் பெயரில் மாவட்டம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாக தெரிவித்தார். காலை உணவு திட்டம், மகளிர்  பேருந்து பயணம், உரிமைத்தொகை, உயர்கல்விக்கான உதவித்தொகை போன்ற காரணங்களால் முதலமைச்சருக்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் பெரும் ஆதரவு அளிப்பதாக கூறினார்.

 மதுரையில் நேற்றைய பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் துறைகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் பேசியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் முத்துசாமி,  அரசியல் ரீதியாக குற்றச்சாட்டை வைக்காமல் அரசியலுக்கு அப்பாற்பட்டு உண்மைதன்மையை ஆராய்ந்து பிரதமர்  பேசி இருக்க வேண்டும், அரசியல் ஆதாயம் பெறுவதற்காக பிரதமருக்கு தவறான தகவலை எழுதிக் கொடுத்து பேச வைத்துள்ளனர். இது அவரது பதவிக்கு சரியானதல்ல. இந்த குற்றச்சாட்டை அரசியலுக்கு அப்பாற்பட்டு ஆராய்ந்தால் உண்மை தெரிய வரும்.  இது போன்ற தவறான தகவலை அளித்தவர்கள் மீது பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அடுத்த ஆண்டு தலைமைச் செயலகத்தில் விஜய் கொடி ஏற்றுவார் என செங்கோட்டையன் பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இதற்கு வாய்ப்பு இல்லை,  வேண்டுமானால் விஜய் அவரது அலுவலகத்தில் கொடியேற்றலாம் என்றார்.

இதையும் படிங்க: பிரதமரின் பொம்மையை தூக்கில் தொங்கவிட்ட காங்கிரசார்..!! நயினார் கண்டனம்..!!

நேற்று மதுரையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, திமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் மலிந்துள்ளதாகக் கூறி மணல் கொள்ளை ஊழல் - ரூ.4,700 கோடி, டாஸ்மாக் மதுபானம் முறைகேடு- ரூ.40,000 கோடி - அரசுப் பணி நியமன ஊழல் - ரூ.900 கோடி, அரசு ஒப்பந்த ஊழல் - ரூ.1,000 கோடி, பணிஇடமாற்ற ஊழல் - ரூ.365 கோடி என ஏறத்தாழ 48 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் குறித்து பேசி, தமிழக மக்களின் வரிப்பணம், திமுக ஆட்சியில் எந்தெந்த துறையில் எவ்வளவு கொள்ளையடிக்கப்பட்டது என்பதை, விவரமாக வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.

வழக்கமாக அமைச்சர்கள் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் தான் போட்டியிடுவார்கள், ஆனால் திமுக அமைச்சர்கள் யார் அதிக ஊழல் செய்வது என்பதில் ஒருவருக்கொருவர் போட்டியிடுகிறார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இதற்கு ஏற்கனவே சோசியல் மீடியா மூலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்திருந்த நிலையில், தற்போது திமுக அமைச்சர்கள் பதிலளிக்கத் தொடங்கியுள்ளனர். 
 

இதையும் படிங்க: பிரதமர் வந்தபோது போராட்டத்தை தூண்டி வேடிக்கை பாக்குதா திமுக? கொந்தளித்த நயினார்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share