மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் பாஸ் விவகாரத்தில் எந்த விதிமீறலும் இல்லை! நிர்மல்குமார் அதிரடி விளக்கம்!
கும்பாபிஷேகம் அமைதியாக முடிந்த பின்னரும் சிலர் தேவையின்றி பிரச்சினையை உருவாக்குவதாகவும், பாஸ் விவகாரத்தில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சென்னை: தமிழகத்தில் மின்பற்றாக்குறை ஏற்பட்டாலும், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அதை சரியான முறையில் கையாண்டு வருவதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாசாலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின்வெட்டு, மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு பாஸ் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா எந்தவித இடையூறும் இல்லாமல் சிறப்பாக நடைபெற்றதாக அமைச்சர் தெரிவித்தார். கும்பாபிஷேகத்துக்கான பாஸ்களை தான் யாருக்கும் வழங்கவில்லை என்றும், பாஸ் எந்த நிறத்தில் இருக்கும் என்பதே நிகழ்ச்சிக்கு முந்தைய நாளில்தான் தனக்கு தெரிய வந்ததாகவும் கூறினார்.
கும்பாபிஷேக பாஸ்களை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பான முடிவை இந்து சமய அறநிலையத்துறை எடுத்ததாகவும், சுமார் 9,000 பாஸ்கள் ஆன்லைன் மற்றும் கோவில் நிர்வாகம் மூலமாக வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தனது குடும்பத்தினருக்குக்கூட டோக்கன் வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் திருப்பம்! இடைக்கால தடை நீட்டிப்பு! புதுச்சேரி நீதிமன்றத்தில் பரபரப்பு!
மேலும், கும்பாபிஷேகம் அமைதியாக முடிந்த பின்னரும் சிலர் தேவையின்றி பிரச்சினையை உருவாக்குவதாகவும், பாஸ் விவகாரத்தில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கிடையே தமிழகத்தின் மின்சார நிலவரம் குறித்தும் அவர் பேசினார். மின்பற்றாக்குறை என்பது பல மாநிலங்களிலும் காணப்படும் பிரச்சினை என்றும், கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 14 மணி நேரத்துக்கும் அதிகமாக மின்வெட்டு ஏற்பட்டதாகவும் அமைச்சர் கூறினார். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் மின்பற்றாக்குறை சரியான முறையில் கையாளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சென்னையின் ஆர்.கே.நகர், ஸ்டான்லி நகர் பகுதிகளில் பிஎஸ்என்எல் பணியின்போது மின்வாரிய கேபிளில் ஏற்பட்ட பாதிப்பால் மின்தடை ஏற்பட்டதாகவும் அவர் விளக்கினார். மேலும், பருவமழையை முன்னிட்டு மின்வாரியத்தின் முன்னெச்சரிக்கை பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
கஜா புயலின்போது சேதமடைந்த ஒரு லட்சம் மின் கம்பங்களை சீரமைக்க ஐந்து மாதங்கள் தேவைப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதே பேட்டியில் டிடிவி தினகரன் குறித்தும் அவர் அரசியல் விமர்சனங்களை முன்வைத்தார்.
இதையும் படிங்க: நேபாள வெள்ளத்தின் அதிர்ச்சி நிலவரம்! 1,400-ஐ கடந்த பலி! 6,000 பேர் மாயம்! உறவினர்களை தேடி கதறும் குடும்பங்கள்!