தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: விஜய் மதுரையை தேர்வு செய்தது ஏன்?... அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன முக்கிய தகவல்...!
முதலமைச்சர் மதுரை மீனாட்சியம்மன் கோவில் இன்னும் செல்வது முடிவாகவில்லை. ஆனதும் சொல்கிறேன் - அமைச்சர் நிர்மல் குமார்
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மதுரை வருகை தந்து, தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கி வைக்க இருக்கிறார். அதனைத் தொடர்ந்து, மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் புனரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட காந்தி மியூசியத்தை திறந்து வைக்க இருக்கிறார். அதன்பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சரான பிறகு முதல் முறையாக விஜய் மதுரை வர உள்ளதால், நகரமே திருவிழா கோலம் பூண்டுள்ளது. சமீபத்தில் தவெக அரசு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்து வைத்த நிலையில், சி.எம். விஜய் மீனாட்சி அம்மனை தரிசிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதுகுறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை விழா நடைபெறும் வளாகப் பகுதிக்கு வருகை தந்த, தமிழக சட்ட மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது., பொதுமக்கள் பாதுகாப்பு கருதி போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக மதுரை வருகிறார். பிரச்சாரத்தின் போது மதுரைக்கு வர கடைசி வரை அனுமதி கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: மதுரை குலுங்க... குலுங்க... அதிரடி விடப்போகும் விஜய்... சி.எம்.யின் இன்றைய ஒட்டுமொத்த பிளான் இதுதான்...!
மதுரை மக்கள் எட்டு தொகுதியில் வெற்றி பெற வைத்துள்ளார்கள். மொத்த அன்பையும் பெற்ற தலைவர் விஜய். மதுரை விழா கோலமாக இருக்கிறது.முதல்வர் வாகன மட்டுமே உள்ளே வரும். எந்த விதத்திலும் நோயாளிகளுக்கு ஒரு சதவீதம் கூட தடையும் இல்லை.
விழா நிகழ்ச்சியில் அதிகபட்சம் 70, 80 பேர் மட்டுமே பயனாளி உட்பட அனுமதி முதல்வர் வார்டுகளில் பார்க்கிறார். எந்த விதத்திலும் மருத்துவமனை நோயாளிகளுக்கும் சிரமம் இல்லாமல் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
பாதுகாப்பும், பொதுமக்கள் பயணம் செய்பவர்களுக்கும் குறைபாடு இல்லாமல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரை வருவது என்பது முதல்வரின் மனதில்பட்டது. திட்டமிட்டார். காந்தி மியூசியம் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கிறார். மீனாட்சியம்மன் கோவில் இன்னும் செல்வது முடிவாகவில்லை. ஆனதும் சொல்கிறேன் என்றார்.
இதையும் படிங்க: கிறிஸ்தவர் விஜய் மீனாட்சி கோயிலில் நுழைய நிபந்தனை? இந்து மத நம்பிக்கை குறித்து கையெழுத்து பெற திட்டம்?