அரசியலில் எந்த ஸ்டெண்டும் எடுபடாது... விஜய்யை கடுமையாக தாக்கி பேசிய அமைச்சர் ரகுபதி!!
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அஜித் குமார் இல்லத்திற்கு சென்றதை சுட்டிக்காட்டி அரசியலில் எந்த ஸ்டெண்டும் எடுபடாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமியிடம் நாகரிகத்தை எதிர்பார்க்க முடியாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் ஓரணியில் தமிழ்நாட்டை தொடங்கி வைத்த பின் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் விமர்சிக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு தார்மீக உரிமை கிடையாது.
அவரது ஆட்சியில் தூத்துக்குடியில் காக்கை குருவிகளைப் போல மக்களை சுட்டுக் கொண்டார்கள். அது குறித்து கேட்டபோது நான் தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று சொல்லக்கூடிய அளவில் தான் முதலமைச்சராக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. அவரிடம் நாகரிகத்தை எதிர்பார்க்க முடியாது. தமிழ்நாடு முதலமைச்சர் நாகரிகம் உள்ளவர். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மரியாதை தருபவர்.
இதையும் படிங்க: அஜித்குமார் இறந்தது லாக் அப் டெத் அல்ல; சாத்தான்குளத்தோடு ஒப்பிட முடியாது... அமைச்சர் ரகுபதி விளக்கம்!!
இறந்து போன அஜித்குமாரின் குடும்பத்திற்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற வகையில் ஆறுதல் சொல்ல வேண்டியது அவரது பணி அவரது கடமை. அதை உணர்ந்து செயலாற்ற கூடியவர் தமிழ்நாடு முதலமைச்சர். கடமை உணர்வு என்ற எதுவுமே இல்லாத கொத்தடிமை எடப்பாடி பழனிச்சாமி. அவரைப் பற்றி கவலைப்பட வேண்டாம். ஏட்டிக்கு போட்டி என்றால் அதற்கு பெயர் எடப்பாடி பழனிச்சாமி.
அவரைப் பொறுத்தவரை எப்பவுமே நாங்கள் ஒன்று செய்தால் அதனை பின்பற்றி அதனையும் செய்து அதில் தோல்வியை தழுவ கூடிய வெற்றிகரமான நபர்தான் எடப்பாடி பழனிச்சாமி. தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அஜித் குமார் இல்லத்திற்கு சென்று பார்த்தது, அரசியலில் எந்த ஸ்டெண்டும் எடுபடாது. ஏனென்றால் நாங்கள் மக்களின் மனதில் இருக்கின்றோம். மக்களுடைய மனதில் தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கும் பொழுது வேறு எந்த ஸ்டெண்டும் எடுபடாது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உங்களுக்கு மனசாட்சி இல்லையா? நீதி எங்கே போனது? ஈபிஎஸ்-ஐ கேள்வி கணைகளால் துளைத்த ஆர்.எஸ்.பாரதி!!