"குட்டிக்கரணம் போட்டாலும் முடியாது" - பிரதமர் மோடி விசிட்டை விமர்சித்த திமுக அமைச்சர்...!
பிரதமர் மோடி சும்மா ஷேர காட்டுவதற்காகவே தமிழ்நாடு வருகிறார் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடியில் விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா 8 லட்சம் மானிய தொகையை கனிம வளத்துறை அமைச்சர் ரகுபதி, பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் வழங்கினர்.
தமிழக அரசின் சார்பில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழக விசைப்படகுகளுக்கு, தமிழக அரசின் சார்பில் தலா 8 லட்சம் மானியத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கோட்டைப்பட்டினம ஜெகதாப்பட்டினம் விசைப்படகு உரிமையாளர்கள் 15 பேருக்கு தலா 8 லட்சம் மானியம் மற்றும் மீனவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழாவில் கனிம வளத்துறை அமைச்சர் ரகுபதி, பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மானிய தொகையை வழங்கினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த கனிம வளத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருவது வாடிக்கையான ஒன்றுதான்- சோ காட்டுவதற்காக வருகிறார்,பாஜக தலைவர்கள் எத்தனை முறை வந்தாலும் குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் கால் பதிக்க முடியாது,
வருகின்ற தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி நிலை மோசமாகத்தான் போகும் தவிர முன்னேற வாய்ப்பு இல்லை,
அமைச்சர் ரகுபதி எப்போதும் நாவடக்கம் உள்ளவர் அத்துமீறி பேசியதாக கூறியதை நிரூபித்தால் பதில் சொல்ல தயார்,நேற்று புதுக்கோட்டையில் நடந்த உருட்டும் திருட்டும் நிகழ்ச்சி அதிமுகவிற்கே சொந்தமானது,
மின் கட்டணத்தை கேட்டால் ஷாக் அடிக்கிறது எடப்பாடி பழனிச்சாமி பேச்சுக்கு அதிமுக காலத்தில் கொண்டு வந்த திட்டம் தான் மின் உயர்வு திட்டம் என பேட்டி அளித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அருணா, ஒன்றிய செயலாளர்கள் சீனியார், பொன் கணேசன், சக்தி ராமசாமி, செயற்குழு உறுப்பினர் கலைமணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.