திமுகவுக்கு மக்கள் ஆப்பு அடிப்பார்கள்... ராஜேந்திர பாலாஜி ஆவேசம்...!
ஆட்சி முடிய போகும் நேரத்தில் ஓரணியில் அவரது குடும்பம் தான் உள்ளது. தமிழ்நாடு இல்லை.
சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது :- மதிமுக நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. ஓரணியில் தமிழ்நாடு என்ற கருத்து காலம் முடிந்த பின்பு தான் ஸ்டாலினுக்கு யோசனையாக வந்துள்ளது. ஆட்சி முடிய போகும் நேரத்தில் ஓரணியில் அவரது குடும்பம் தான் உள்ளது. தமிழ்நாடு இல்லை.
தமிழக மக்கள் தவித்துப் போய் உள்ளனர். குடிக்க தண்ணீர் இல்லை. சாப்பிட உணவு இல்லை. வேலை செய்ய தொழில் இல்லை. வரவுக்கும் செலவுக்கும் பணம் இல்லை. மக்கள் வெறும் பையுடன் தான் திரிகின்றனர். ஸ்டாலின் குடும்பம் தான் சுபிட்சமாக சந்தோசமாக நன்றாக உள்ளனர். ஓரணியில் தமிழ்நாடு என்பது மக்களை குழப்புகின்ற வேலை. தமிழ் மக்கள் சரியான பதிலடி யை திமுகவுக்கு கொடுப்பார்கள்.
அதிமுக- பாஜக கூட்டணியானதிலிருந்து திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. கூட்டணி கட்சிகளுக்குள் யார் மூலமாக பிரச்சினை வந்தாலும் நாங்கள் ஒருவருக்கொருவர் பதில் கூறத் தான் செய்வோம். எங்களது கூட்டணி பதற்றத்தின் வெளிப்பாடு தான் ஸ்டாலினின் பேச்சாக வெளி வருகிறது. அதிமுக பாஜகவுக்கு அடிமைக் கட்சி கொத்தரிமைக் கட்சி என்றுதான் எப்போதும் எதிரணியினர் பேசுகின்றனர். அப்படி என்றால் காங்கிரசுக்கு திமுக அடிமையா? மொழி, இனப் பிரச்சனையை தூண்டுவது திமுகவின் நாடகம்.
இதையும் படிங்க: அதிகாரம் நிரந்தரம் இல்ல.. ஆடாத ! முன்னாடி அப்பாவிகள்.. இப்போ பயங்கரவாதிகளா? சீமான் காட்டம்..!
அதிமுகவும் பாஜகவும் விழிப்பாக முழிப்பாக உள்ளது. தமிழக மக்கள் விவரமாக உள்ளனர். திமுகவுக்கு மக்கள் ஆப்பு அடிப்பார்கள் அதிமுக தான் ஜெயிக்கும். காங்கிரசை காலம் முழுவதும் எதிர்த்த கம்யூனிஸ்ட் கட்சிகள் தோளில் உட்கார்ந்து பயணம் செய்வது எந்த விதத்தில் சரியான நியாயம்.
எதிரெதிர் அணியாய் இருந்த காங்கிரசும், கம்யூனிஸ்டும் கைகோர்க்கிறது. காலமும் சூழ்நிலையும் சூழ்ச்சியும் மாறும்பொழுது தேசத்தின் ஒற்றுமை நலனுக்காக நாட்டின் மாநிலத்தின் நலனுக்காக அதிமுக எடுத்துள்ள முடிவு அற்புதமான முடிவு.
இதையும் படிங்க: எது மத்திய அரசு, எது மாநில அரசுனு கூட வித்தியாசம் தெரியல.. அதிமுகவை விளாசிய கனிமொழி..!