×
 

எதிர்க்கட்சி இல்லாத சட்டமன்றம்..! இந்த நிமிஷத்துக்காகவே காத்திருந்தேன்..! அமைச்சர் ரமேஷ் நெகிழ்ச்சி..!!

முதல்வர் விஜயின் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் அமைச்சர்றான் உரையாற்றினார்.

தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதிய தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராக மே 10 அன்று பதவியேற்றார். அவரது முதல் பொதுப் பங்கேற்பு நிகழ்வாக, தான் போட்டியிட்டு வென்ற திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவுக்கு இன்று திருச்சி சென்றார்.

இது அவரது பதவியேற்புக்குப் பிறகான முதல் பெரிய பொதுக் கூட்டமாகவும் கருதப்படுகிறது. புனித ஜோசப் கல்லூரியில் நடைபெற்ற இந்த மக்கள் நன்றி தெரிவிப்பு கூட்டத்திற்கு ஏராளமான தொண்டர்களும் பொதுமக்களும் வருகை தந்திருந்தனர். முதல்வர் விஜய் காக நீண்ட நேரம் காத்திருந்தனர். 

மாண்புமிகு முதலமைச்சர் எனக் கூறி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தனது வரவேற்புரை ஆற்றினார். இந்த நிமிடத்திற்காக தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன் என்றும் தெரிவித்தார். இப்படி தமிழ்நாடு முதல்வராக தளபதியை பார்க்க வேண்டும் என்ற காத்திருந்ததாகவும் தெரிவித்தார். சாமானியனை ஸ்ரீரங்கத்தில் வெற்றி பெற வைத்து ஆட்சியில் அமர்ந்திருக்கும் எங்கள் தலைவர் விஜய் என்று தெரிவித்தார். வரலாற்றில் ஒரு தலைவன் இருக்கிறார் என்றால் அது விஜய் தான் என்று கூறினார்.

இதையும் படிங்க: அமைச்சரிடமே லஞ்சம்..! கோவில் நிர்வாகத்தின் முகத்திரை கிழிந்ததா? வானதி சீனிவாசன் விளாசல்..!!

பல மேடைகளில் முதல்வர் விஜய் முன்பே கூறி இருப்பதாகவும், சின்ன பசங்க என்று ஏளனமாக பார்க்க வேண்டாம் என்று கூறி வந்ததாகவும், இந்த சின்ன பசங்க என்ன செய்வாங்க என்று ஏளனமாக பார்க்காதீர்கள் என்று கூறியதாகவும் தெரிவித்தார். அதேபோல இப்போதும் அதுபோல பார்ப்பவர்களுக்கு இதே சின்ன பிள்ளைகள் வருங்காலத்தில் எதிர்க்கட்சியே இல்லாத சட்டமன்றத்தை உருவாக்குவோம் என்று தெரிவித்தார். இது வருங்காலத்தின் வரலாறாக மாறும் என்று தெரிவித்தார். 

இதையும் படிங்க: அன்னதானம் TO கோவில் வருவாய் வரை முழு audit..!! யாராக இருந்தாலும் நடவடிக்கை..! அமைச்சர் ரமேஷ் வார்னிங்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share