அறநிலையத்துறை அமைச்சர் பண்ணுற காரியமா இது?! அடுத்த சர்ச்சையில் சிக்கிய ரமேஷ்! வலுக்கும் எதிர்ப்பு!
முதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி ஆட்சியில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக, த.வெ.க.,வை சேர்ந்த ரமேஷ் இருக்கிறார்.
முதல்வர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வழங்கிய பரிசுகள் சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. வழக்கமான அரசியல் வாழ்த்து சந்திப்பாக தொடங்கிய இந்த நிகழ்வு, தற்போது மதம், அரசியல் மற்றும் சின்னங்களின் அரசியல் குறித்த விவாதமாக மாறியுள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி அரசில் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பணியாற்றி வரும் ரமேஷ், சமீப காலமாக கோவில்களில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு நிர்வாக மாற்றங்களை செயல்படுத்தி வருகிறார். இளம் அமைச்சராக அறியப்படும் அவர், சமூக மற்றும் அரசியல் கருத்துகள் தொடர்பாகவும் அடிக்கடி கவனம் ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில், முதல்வர் விஜயின் பிறந்தநாளையொட்டி தலைமைச் செயலகத்தில் அவரை நேரில் சந்தித்த அமைச்சர் ரமேஷ், மாதா சிலை ஒன்றையும், “உலக சிந்தனை சிற்பி தந்தை பெரியார்” என்ற நூலையும் நினைவுப் பரிசாக வழங்கினார். இந்த புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகள் வெளியாகத் தொடங்கின.
இதையும் படிங்க: ‘ரீல்ஸை’ விட்டுட்டு ‘ரியாலிட்டிக்கு’ வாங்க என முதல்வர் விஜயை சாடிய ஜெயக்குமார்!
பொதுவாக அறநிலையத்துறை அமைச்சர்கள், தங்களது துறையுடன் தொடர்புடைய கோவில் கலைப்பொருட்கள், ஆன்மிக நினைவுப் பரிசுகள் அல்லது பாரம்பரிய அடையாளங்களை முதல்வர்களுக்கு வழங்குவது வழக்கமாக இருந்து வந்ததாக அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த ஆட்சிகளிலும் இதுபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், அறநிலையத்துறை அமைச்சரான ரமேஷ் வழங்கிய பரிசுத் தேர்வு குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் அதிகரித்துள்ளது. சிலர் இதை தனிப்பட்ட அரசியல் மற்றும் சிந்தனை அடையாளத்தின் வெளிப்பாடாக பார்க்கின்றனர். மற்றொரு தரப்பினர், அறநிலையத்துறை பொறுப்பில் இருக்கும் அமைச்சர் வழங்கும் பரிசுகள் துறையின் அடையாளத்துடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், பெரியார் குறித்த நூல் மற்றும் மாதா சிலை ஆகிய இரண்டையும் இணைத்து வழங்கியிருப்பது அரசியல் ரீதியாக பல்வேறு விளக்கங்களுக்கு வழிவகுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சரின் தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகாத நிலையில், சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் விவாதம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதையும் படிங்க: நடிகை த்ரிஷாவுடன் இணைந்து பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய முதல்வர் விஜய்!